Jai been others
www.garudabazaar.com

"நான் சொன்ன கதை அவருக்கு பிடிச்சிருந்தது.. புனித் சினிமா ஹீரோ மட்டுமல்ல".. மிஷ்கின் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவா ராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்.

he liked my story, Mysskin condolence Puneeth Rajkumar demise

இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு இன்று நிகழும் நிலையில், புனீத்தின் மறைவு குறித்து தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான மிஸ்கின் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “புனித் ராஜ்குமாரின் மறைவுச் செய்தியை கேட்டு பெரும் அதிர்ச்சியடைந்தேன். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்த அவர் ஒரு படம் குறித்து பேசினார். நான் பெங்களூரு சென்று அவரிடம் ஒரு கதையை கூறினேன்.

அவருக்கு அது பிடிந்திருந்தது. எனினும் அது படமாக உருவாகவில்லை. அந்த கதைக்கு பெரிய பட்ஜெட்டுக்கான தேவை இருந்ததால் அதை படமாக்குவது சாத்தியமில்லை என்பதை அவர் வெளிப்படையாக கூறினார். என்னை பார்ப்பதற்காக தன்னுடைய பார்க்கிங் பகுதிக்கு இறங்கி வரும் அளவுக்கு பணிவான மனிதராக இருந்தார்.

நாங்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரிந்து சென்றோம். விரைவில் ஒரு படம் பண்ணலாம் என்று உறுதியேற்றுக் கொண்டோம். அன்புள்ள புனித், நீங்க வெறும் சினிமா ஹீரோ மட்டுமல்ல, நீங்க ஒரு உண்மையான ஹீரோ. உங்கள் அன்பு, பணிவு, நேர்மை ஆகியவற்றால் உங்களுக்கு ஆயிரக்கணக்கான நண்பர்களும், ரசிகர்களும் கிடைத்துள்ளனர்.

இயற்கை அன்னை தனது மடியில் உங்களை தவழ வைக்க விரும்பிய தூய்மையான குழந்தை நீங்கள். எங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களை நாங்கள் மிஸ் செய்வோம் புனித்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

he liked my story, Mysskin condolence Puneeth Rajkumar demise

People looking for online information on Mysskin, Puneeth rajkumar, PuneethRajkumar, RIPPuneethRajkumar will find this news story useful.