Sandunes Others
RRR Others USA
www.garudabazaar.com

Ilaiyaraaja Health: "நல்லாருக்கேன்யா!".. இளமை இதோ.. இதோ.. அவரே வெளியிட்ட வேறமாரி வீடியோ! கமலின் Viral ரீ-ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Ilaiyaraaja: தமிழ் மற்றும் தென்னிந்திய திரைத் துறையில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தம்முடைய இசையால் ரசிகர்களையும் திரையுலகக் கலைஞர்களையும் கட்டிபோட்டு வைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

இசைப்பயணம்

இன்றும் பல முன்னணி இசையமைப்பாளர்கள் பெரிதும் மதிக்கக்கூடிய இசையாக இசைஞானி இளையராஜாவின் இசை அமைந்திருப்பதை பல்வேறு தருணங்களில் அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.  ‘அன்னக்கிளி’ திரைப்படத்தில் தொடங்கிய இளையராஜாவின் இசை பயணம் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

ராஜாவுக்கு என்ன ஆச்சு?

அண்மையில் தம்முடைய புது ஸ்டூடியோவை கோடம்பாக்கத்தில் தொடங்கிய இளையராஜா, அடுத்தடுத்த திரைப்படங்களில் பிஸியாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இளையராஜாவின் உடல்நலம் குறித்த உண்மையற்ற வதந்திகள் இன்று காலை முதலே பரவி வந்தன. இதனால் இளையராஜா ரசிகர்கள் தவித்துவிட்டனர்.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

இளமை இதோ... இதோ

ரசிகர்களின் தவிப்பை போக்கும் வகையில் இசைஞானி இளையராஜா, தற்போது தம் ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த செல்ஃபி வீடியோவில் தோன்றி பேசும் அவர், “wish you happy new year.. இளமை இதோ... இதோ.. காலேஜ் டீனேஜ் பெண்கள்.. எல்லாருக்கும் என் மீது கண்கள்! இது எப்படி இருக்கு?” என உற்சாகமாக பேசுகிறார்.

கமலின் Viral ரீ-ட்வீட்

இளையராஜாவின் இந்த ட்வீட்டை ரீ-ட்வீட் செய்த நடிகர் கமல்ஹாசன், “இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year!” என பதிவிட்டுள்ளார்.

கமலின் ‘விக்ரம்’

நடிகர் கமல்ஹாசன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த திரைப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் மற்றும் நடித்து வருகின்றனர்.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

வெற்றிமாறனின் விடுதலை 

இசைஞானி இளையராஜா, இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்துக்கும், வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இருவரும் இணையக் கூடிய முதல் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக சூரியும், முக்கிய முதன்மை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

சிபிராஜ் நடிக்கும் மாயோன்

இதேபோல் சிபிராஜ் நடிக்கும் மாயோன் திரைப்படத்துக்கும் இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

இப்படத்தில் இசையராஜா இசையில் ரஞ்சனி மற்றும் காயத்ரி மாயோனே பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலானது.

Also Read: "Single Print கூட இல்லாம இருந்தது!".. சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவின் கிளாசிக் படம் ‘திக்கற்ற பார்வதி’.. சென்னை ஃபிலிம் ஃபெஸ்டிவல்லயா? எப்போ?

Also Read: "சாப்ட்டுட்டு இருந்தவர் எழுந்து".. "அஜித் செய்த இந்த விஷயம் Hats off".. ராஜமௌலி Breaks! மாஸ் பேச்சு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

what happpened to Ilaiyaraaja viral video Kamal tweet

People looking for online information on HappyNewYear2022, Ilaiyaraaja, Ilaiyaraaja Health, Kamal Haasan, Music, NewYear2022 will find this news story useful.