"Money Heist... என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை" - பிரபல நடிகர் 'அதிரடி' கருத்து...!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா நோய் காரணமாக பல தேசங்களிலும் ஊரடங்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். இந்நிலையில் பலரும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களையே நம்பி இருக்கின்றனர். இவற்றுக்கு அடுத்த கட்டமாக வெப்சீரிஸ் பார்க்கும் பழக்கம் இந்தியர்களுக்கு அதிகமாகி விட்டது.

அப்படி சமீபத்தில் பலருடைய பேவரைட் வெப் சீரிஸாக சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பது 'Money Heist' தான். Netflix-ல் வெளியான ஸ்பானிஷ் நாடகமான இதில் Professor தலைமையில் திருடர் கும்பல் வங்கிகளைக் கொள்ளையடிப்பார்கள். மிகவும் விறுவிறுப்பான காட்சிகளால் இன்று நம்பர் 1 ஆக இருக்கிறது. இந்நிலையில் ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா இது பற்றி ஒரு பதிவு இட்டுள்ளார். "எனக்கு Professor போல் ஆக வேண்டும். என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. இயக்குநர்களே சீக்கிரம் இப்படி ஒன்றை நாம் செய்ய வேண்டும். அதுவரை Bella Ciao" என்று கூறியுள்ளார்.
I want to be the professor. I want to put this out in the universe. Hello reverent filmmakers! Please! I’m dying to do something like this. I’m itching to go on sets & work, like each and every human. But patience is a virtue they say. Calm down. Till then Bella Ciao #MoneyHeist pic.twitter.com/ZOLhCypgrU
— Ayushmann Khurrana (@ayushmannk) April 14, 2020