காப்பான் படத்தின் காட்சி.. நிஜத்தில் நடக்கும் சம்பவம் - பிரபல இயக்குநர் வேண்டுகோள்.
முகப்பு > சினிமா செய்திகள்காப்பான் படத்தில் இடம்பெற்ற காட்சி நிஜத்தில் நடப்பது குறித்து இயக்குநர் இரா.சரவணன் கருத்து தெரிவித்துள்ளார்.

கத்துக்குட்டி படத்தை இயக்கியவர் இரா.சரவணன். நரேன், சூரி, ஷ்ருஷ்டி டாங்கே நடித்த இத்திரைப்படம் விவசாய பிரச்சனைகளை மையப்படுத்தி உருவாகி ரசிகர்களை கவர்ந்தது. இவர் தற்போது சசிகுமார், ஜோதிகாவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் இரா.சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், ''காப்பான் படத்தில் காட்டப்பட்டதை போல அமெரிக்காவிலிருந்து வந்த படைப்புழுக்கள் சோளம் தொடங்கி நெற்பயிர் வரை திடீரென தாக்க தொடங்கின. இந்த புழுக்கள் இந்தியாவுக்கு எப்படி வந்தன என்கிற விசாரணையோ தடுப்பு மருந்து நடவடிக்கையோ இன்றுவரை எடுக்கப்படவில்லை. பயிருக்கு பூச்சி.. உயிருக்கு வைரஸ்!'' என தெரிவித்துள்ளார்.
காப்பான் படத்தில் காட்டப்பட்டதை போல அமெரிக்காவிலிருந்து வந்த படைப்புழுக்கள் சோளம் தொடங்கி நெற்பயிர் வரை திடீரென தாக்க தொடங்கின. இந்த புழுக்கள் இந்தியாவுக்கு எப்படி வந்தன என்கிற விசாரணையோ தடுப்பு மருந்து நடவடிக்கையோ இன்றுவரை எடுக்கப்படவில்லை. பயிருக்கு பூச்சி.. உயிருக்கு வைரஸ்! pic.twitter.com/DdQxQYX1AD
— இரா.சரவணன் (@erasaravanan) April 2, 2020