LIGER D Logo Top
www.garudabazaar.com

‘நலமுடன் இருக்கார்’.. மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா.. உடல்நிலை குறித்த Exclusive தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநராக அறிமுகமே தேவைப்படாத  ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, தமிழ் சினிமாவின் மண் மனம் மாறாத திரைக்காவியங்களை இயக்கியவர்.

Director Bharathiraja admitted in Hospital Health update

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும் இருக்கும் இயக்குநர் பாரதிராஜா, அண்மைக் காலங்களாகவே இன்றைய இளம் ஹீரோக்கள், இளம் இயக்குநர்களின் திரைப்படங்களில் ராக்கிங் ஸ்டாராக நடித்து வருகிறார்.  தொடர்ச்சியாக சமீப வருடங்களில் வெளியான 'குரங்கு பொம்மை', 'ஈஸ்வரன்', 'ராக்கி', 'குற்றமே தண்டனை', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களில் தம் எனர்ஜி குறையாமல் நடித்துள்ளார்.

சில நாட்கள் முன்னாள், நடந்த திருச்சிற்றம்பலம் திரைப்பட விழாவில் “என் டார்லிங்.. என் செல்லப்பிள்ளை.. பாரதிராஜா.. பாரதிராஜா என்கிற பெயர், அது ஒரு பெயரா.? அது உலக தமிழர்களின் அடையாளக் குரல். இன்றைக்கும் ஒரு மேடையில் ஏறி என் இனிய தமிழ் மக்களே என்று அவர் சொன்னால் உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் கையும் தன்னையறியாமல் தானாக தட்டும். ஆளுதான் கொஞ்சம் பார்ப்பதற்கு கரடு முரடாக இருப்பாரே தவிர அவர் ஒரு குழந்தை” என்று கூறியிருந்தார்.

அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் சீனியர் திருச்சிற்றம்பலமாக, அதாவது தனுஷின் தாத்தாவாக பாரதிராஜாவின் நடிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்ததாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், படத்தின் சுவாரஸ்யத்துக்கு ஒரு பெரும் பலமாகவும், பாரதிராஜா ஏற்று நடித்த அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் குறிப்பிட்டனர். இதே நேரத்தில் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு என்றும் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

Director Bharathiraja admitted in Hospital Health update

இதனைத் தொடர்ந்து நம் தரப்பில் பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து, அவருக்கு நெருங்கிய மற்றும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் கேட்டறிந்தோம். அதன்படி வழக்கமான சர்க்கரை நோய் பரிசோதனைக்காக  மருத்துவமனை சென்ற பாரதிராஜாவுக்கு மருத்துவ பரிசோதனையில் உப்பின் அளவு குறைந்து, நீர்சத்து குறைபாடு இருப்பதாகவும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து  அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இப்போது உடல்நலத்துடன் இருக்கும் பாரதிராஜாவுக்கு சற்று ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே ஓரிரு நாட்கள் மருத்துவமனை ஓய்வுக்கு பின்பு, வீடு திரும்புவார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Director Bharathiraja admitted in Hospital Health update

People looking for online information on Bharathiraja, Thiruchitrambalam will find this news story useful.