“நிச்சயதார்த்தம் simple-ஆ… ஆனா கல்யாணத்துக்கு”… நடிகர் விக்னேஷ்காந்த் வெளியிட்ட viral pics!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல யுடியூபரும் நடிகருமான விக்னேஷ் காந்த் தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

RJ Vignesh kanth engagement pics went viral

Also Read | முன்ன ஆட்டத்தப் பாத்தோம்… இப்போ ஆண்டவர் ஆக்ஷன்- வெளியான கொல மாஸ் விக்ரம் போஸ்டர்!

விக்னேஷ் காந்த்…

தமிழ் யூடியூபர்களில் பிரபலமான ஒருவராக இருப்பவர் விக்னேஷ் காந்த். பல தொலைக்காட்சி சேனல்களிலும் தொகுப்பாளராக பணியாற்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விக்னேஷ்காந்த்.

இதையடுத்து அவர் மீசைய முறுக்கு, மெஹந்தி சர்க்கஸ் மற்றும் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ உள்ளிட்ட சில படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

RJ Vignesh kanth engagement pics went viral

நிச்சயதார்த்தம்…

இதையடுத்து இப்போது அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. அதில் திருமண நிச்சயதார்த்த கோலத்தில் இருக்கும் அவர் “நிச்சயதார்த்தம் முடிந்தது. சிறிய எளிமையான நிகழ்வாக அமைந்தது.  அனைவரையும் திருமணத்துக்கு அழைக்கிறோம். கல்யாண தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

RJ Vignesh kanth engagement pics went viral

வாழ்த்துகள்…

இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் பிரபல யுடியூபர்களான ராஜ்குமார், மதன் கௌரி, ரியோ உள்ளிட்ட அவரின் நண்பர்களும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். விக்னேஷ் காந்த் பகிர்ந்த புகைப்படங்கள் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகின்றன. இதையடுத்து ரசிகர்களும் சக யுடியூபர்களும் அவருக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

RJ Vignesh kanth engagement pics went viral

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

RJ Vignesh kanth engagement pics went viral

People looking for online information on Rj Vignesh Kanth, RJ Vignesh kanth engagement, RJ Vignesh kanth engagement Pictures will find this news story useful.