ஹரிஷ் கல்யாணின் தாராள பிரபு'வை குடும்பத்தோட பார்க்கலாமா? - பிரபல தயாரிப்பாளர் சொன்ன கருத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விந்தணு தானத்தை மையமாக வைத்து இன்று வெளியான 'தாராள பிரபு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு நன்றாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

ஹரிஷ் கல்யாணுக்கு தயாநிரி அழகிரி பாராட்டு | Dhaya Alagiri praises Harish kalyan movie Dharalaprabhu

அந்த வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாக திரைப்பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி பாராட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ''அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம். ஹரிஷ் கல்யாண் மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்,'' என தெரிவித்து இருக்கிறார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்த ஹரிஷ் கல்யாண், ''இது போன்று ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி ப்ரோ,'' என்று பதிலளித்து இருக்கிறார்.

Entertainment sub editor