Udanprape others
www.garudabazaar.com

வெறித்தனம்!!.. தனுஷ் - செல்வராகவன் இணையும் ‘நானே வருவேன்’.. வந்தாச்சு ‘புதிய’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - செல்வரகவன் கூட்டணி என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு வேறலெவலில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Dhanush Selvaraghavan Naane Varuven Big set Gokulam Studios

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளிட்ட திரைப்படங்களை அடுத்து மீண்டும் தனுஷ்- செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்  ‘நானே வருவேன்’. முன்னதாக எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வெளியாகி இருந்தது.

அதே பாணியில் பேய் படத்தில் ஆவியாக வந்து ஹீரோயின் பாடும் வரியை அடுத்த படத்துக்கும் டைட்டிலாக செல்வராகவன் வைத்துள்ளார். கடந்த ​​2021 ஆகஸ்ட் மாதம், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. வி கிரியேஷன்ஸின் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாகவும், இதற்கென சென்னை கோகுலம் ஸ்டூடியோஸில் பிரம்மாண்டமான செட் போடப்படுவதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அண்மையில் இதே ஸ்டூடியோஸில்தான் தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட் நடந்தது. அங்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கெப்டனுமான தல தோனி வருகை தந்து விஜயை சந்தித்திருந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் இதே ஸ்டூடியோவில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் நடக்கின்றன.

தனுஷ் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்த்துக்கும் புதுப்பேட்டை 2-ஆம் பாகத்துக்கும் தனுஷ் தயாராக இருக்கிறார்.

செல்வராகவன் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘சாணிக்காயிதம்’ மற்றும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் ‘பீஸ்ட்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Selvaraghavan Naane Varuven Big set Gokulam Studios

People looking for online information on சிவகார்த்திகேயன், செல்வராகவன், டாக்டர், தனுஷ், நானே வருவேன், நெல்சன், விஜய், Beast, Dhanush, Doctor, Kalaipuli S Thanu, Naane Varuven, Naanevaruven, Selvaraghavan will find this news story useful.