www.garudabazaar.com

உங்களுக்கு பெரிய மனசு சிவகார்த்திகேயன்! டாக்டர் பட DOP உருக்கமான அறிக்கை! முழு தகவல் உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோலமாவு கோகிலா' புகழ் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'.

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த சனிக்கிழமை அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தியேட்டரில் வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். குழந்தைகள் கடத்தல் பற்றிய இந்த படத்தின் பிளாக் காமெடி காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் 20.17 கோடி ரூபாயை டாக்டர் படம் வசூலித்துள்ளது.

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

அதில் முதலில் கனா படத்தில் விஜய் கார்த்திக் பணியாற்ற சிவகார்த்திகேயன் கேட்ட பொழுது குறுகிய நாளில் பணியாற்ற முடியாது என மறுத்துவிட்டதாகவும், அதன் பின் டாக்டர் பட வாய்ப்பை வழங்கியதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை டாக்டர் பட மேடையில் பகிர பெரிய மனசு வேண்டும் என்றும், உங்களின் Comfort Zone யை விட்டு வெளியே வந்து இந்த படத்தை செய்தது தான் வெற்றிக்கு காரணம் என்றும், இன்னும் பல வெற்றிகள் உங்களுக்கு காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். 

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

மேலும், சிவகார்த்திகேயன், தொழில் நுட்ப கலைஞர்கள் விரும்பும் தயாரிப்பாளர் என்றும் பாராட்டியுள்ளார்.

doctor dop vijay karthik kannan about hero sivakarthikeyan

People looking for online information on Doctor, Siva Karthikeyan will find this news story useful.