LIGER D Logo Top
Tiruchitrambalam D Logo Top
Viruman Logo Top
www.garudabazaar.com

Naane Varuven: செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் "நானே வருவேன்".. வைரலாகும் புதிய போஸ்டர்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் நானே வருவேன்.

Dhanush Naane Varuven new Posters Selvaraghavan நானே வருவேன்

புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை தனுஷ் நடிப்பில் இயக்கிய செல்வராகவன், தனுஷ் நடிப்பில், ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணி இணையக்கூடிய திரைப்படமாக நானே ஒருவன் திரைப்படம் அடுத்து வெளியாக இருக்கிறது.

கலைப்புலி S தாணு தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முன்னதாக ஊட்டியில் நடைபெற்ற வந்தன. இந்த திரைப்படத்தில் நாயகியாக ‘மேயாத மான்’ இந்துஜா நடித்திருக்கிறார். தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் இந்த திரைப்படத்தில் செல்வராகவனும் இணைந்து நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக காடுகளுக்கு நடுவே தனுஷ், தம் கைகளில் அம்பெய்தும் கருவிகளுடன் நின்று கொண்டிருந்த புகைப்படம் வெளியாகி அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நானே வருவேன் திரைப்படம் தொடர்பான புதிய போஸ்டர்களை தயாரிப்பாளர் தாணு தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தாணு தம்முடைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Naane Varuven new Posters Selvaraghavan நானே வருவேன்

People looking for online information on Dhanush, Kalaippuli S Thanu, Naane Varuven, Naane Varuven Posters, Selvaraghavan will find this news story useful.