Reliable Software
www.garudabazaar.com

தனுஷின் கர்ணன் படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி சேனல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி செல்வராஜ் இயக்கத்தி கதிர் நடித்து வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.

Dhanush Karnan Movie OTT rights bagged by Amazon Prime Video

சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இந்த படம் மாரி செல்வராஜ்க்கு அழுத்தமான அடையாளத்தை உருவாக்கித் தந்தது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகியிருந்தன.

Karnan Movie OTT rights bagged by Amazon Prime Video

அதன்படி நடிகர் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் கர்ணன் திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். சந்தோஷ் நாராயணன் இசையில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன், இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின.

Karnan Movie OTT rights bagged by Amazon Prime Video

குறிப்பாக கண்டா வரச்சொல்லுங்க பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றுமா அல்லது அமேசான் ப்ரைம் வீடியோ கைப்பற்றுமா என பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமத்தை அமேசான் பரைம் வீடியோ கைப்பற்றியுள்ளதாகவும், திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 35 நாட்களுக்கு பின்னர் அமேசான் ப்ரைமில் ஒளிபரப்பாகத் தொடங்கும் என தகவல்கள் தெரியவந்துள்ளன.

ALSO READ: 'லோகேஷ் கனகராஜ்' படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி!.. யாருடைய கேரக்டரில் நடிக்கிறார் தெரியுமா? Viral ஆகும் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Karnan Movie OTT rights bagged by Amazon Prime Video

People looking for online information on Amazon Prime Video, Dhanush, Karnan, Mari Selvaraj, OTT, Santhosh Narayanan will find this news story useful.