Rocketry
www.garudabazaar.com

"மகிழ்ச்சியா இருக்கு.." சசிகுமார் படத்தின் பாடலுக்காக நெகிழ்ந்து போன டி. இமான்.. காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் பல திரைப்படங்களில் நாயகனாகவும் நடித்து பிரபலம் அடைந்தவர் சசிகுமார்.

D imman about super singer fame muthuchippi for kaari movie

நடிப்பு மற்றும் இயக்கம் தவிர, சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார் சசிகுமார். கடைசியாக, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த சசிகுமார், தொடர்ந்து காரி, பகைவனுக்கு அருள்வாய் உள்ளிட்ட திரைப்படங்களிலும் அடுத்தடுத்து நடித்து வருகிறார்.

இதில், காரி என்னும் திரைப்படத்தை ஹேமந்த் இயக்கி வருகிறார். மேலும், சசிகுமாருடன் பார்வதி அருண், பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், J.D. சக்ரவர்த்தி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் இசையமைத்து வருகிறார்.

எங்கும் ஒளி பிறக்குமே

காரி படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அதே போல, சாஞ்சிக்கவா, கொப்பன் மவனே உள்ளிட்ட பாடல்களும் மக்கள் மத்தியில், அதிகம் லைக்குகளை அள்ளி இருந்தது. இதனைத் தொடர்ந்து, தற்போது காரி படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலான "எங்கும் ஒளி பிறக்குமே" என்ற பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

D imman about super singer fame muthuchippi for kaari movie

டி. இமான் பகிர்ந்த ட்வீட்

இந்நிலையில், இந்த பாடல் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக, படத்தின் இசை அமைப்பாளர் டி. இமான் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவு ஒன்று, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட்டடித்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான சூப்பர் சிங்கர் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் பாடகர் முத்துசிற்பி. இவர் தான் காரி படத்தில் வரும் எங்கும் ஒளி பிறக்குமே என்ற பாடலை பாடி உள்ளார்.

D imman about super singer fame muthuchippi for kaari movie

ஒரு Energetic பாடலுக்காக..

இது தொடர்பாக, டி. இமான் பகிர்ந்த பதிவில், "விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து மற்றொரு நம்பிக்கைக்குரிய நாட்டுப்புற கலைஞரான முத்துசிற்பியைக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. நான் இசையமைத்து வரும் காரி படத்தில், ஒரு Energetic பாடலுக்காக முத்துசிற்பியின் குரலை பதிவு செய்துள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.

 

டி. இமான் தெரிவித்துள்ளது போலவே, முத்துசிற்பி பாடி உள்ள இந்த பாடல் தற்போது வெளியாகி உள்ள நிலையில், முழுக்க முழுக்க எனர்ஜி நிறைந்து அசத்தலாக உள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

D imman about super singer fame muthuchippi for kaari movie

People looking for online information on D Imman, Kaari Movie, Kaari Songs, M Sasikumar, Muthuchippi will find this news story useful.