Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளி பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்... ஆனா ஒரு டுவிஸ்ட் இருக்கு.. என்னனு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முக்கியமாக போன சீசனில் இருந்த புகழ், ஷிவாங்கி, மணிமேகலை, பாலாவுடன் இந்த சீசனில் சுனிதா, சரத் போன்றோர் பங்கெடுத்துள்ளனர். இந்த கோமாளிகளை வைத்துக்கொண்டு போட்டியாளர்கள் சமைக்கப் படாத பாடுப்படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. இப்படி பல தடைகளை மீறி இந்த சீசனில் யார் ஜெயிப்பார் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளனர்.

CWC pavithra celebrated birthday for her pet பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்

இந்நிலையில்சமீபத்தில் நடந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் எப்பொழுதுமே இப்படிப்பட்ட வைல்டு கார்டு போட்டியில் ஒருவர்தான் தேர்வாகி இறுதி போட்டிக்கு செல்வார். ஆனால் இம்முறை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் இரண்டு பேர் போட்டியை வென்றுள்ளனர். ஆம் ஷகிலா மற்றும் பவித்ரா இருவருமே சிறப்பாக சமைத்து நடுவர்களின் பாராட்டைப் பெற்றனர். எனவே இந்த சீசனில் நான்காவது, ஐந்தாவது நபராக இறுதி போட்டிக்கு செல்பவர்கள்  ஷகிலா  மற்றும் பவித்ரா தான் என்பது உறுதியாகியுள்ளது.

CWC pavithra celebrated birthday for her pet பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்

போட்டியாளர்களில் மாடலும், நடிகையுமான பவித்ரா லட்சுமி பல முன்னணி விளம்பரங்களிலும், பல தமிழ் படங்களிலும், மலையாளத்தில் 'உள்ளாசம்' படத்திலும் நடித்துள்ளார். தற்போது தனது செல்ல நாய் கோகோவின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய பவித்ரா லட்சுமி, இந்த பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். தனது செல்லமான கோகோவுடன் பவித்ரா லட்சுமியின் இந்த அழகான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதேபோல் சமீபத்தில் பிரபல நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரான ஷிவானி கூட தனது நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CWC pavithra celebrated birthday for her pet பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்

 

Tags : Pavithra

CWC pavithra celebrated birthday for her pet பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்

People looking for online information on Pavithra will find this news story useful.