Reliable Software
www.garudabazaar.com

Video: தனுஷ் பட நடிகைக்கு திருமணம்! வைரல் ஆகும் ப்ரீ வெட்டிங் ஷூட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷுடன் பட்டாஸ் திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இதுதொடர்பான ப்ரீ வெட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

actress mehreen pirzada prewedding shoot video goes viral

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. சந்தீப் கிஷன், விக்ராந்த் மற்றும் பலர் நடித்து வெளியான இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. அதன் பின்னர் தமிழில் விஜய் தேவரகொண்டா நடித்த நோட்டா படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பட்டாஸ்’ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மெஹ்ரீன் பிர்சாடா பிரபலமானார். அதன் பிறகு தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடனும் நடித்துவிட்டார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 25 வயதான நடிகை மெஹ்ரீன் பிர்சாடா அண்மையில் தான் தமது நீண்டநாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். 

ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார் மெஹ்ரீன் பிர்சாடா. இவர்களின் காதலுக்கு இவரது குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது. இந்த நிச்சயதார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

ஜெய்ப்பூரில் உள்ள Alila Fort Bishangarh அரண்மனையில் இவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதைத் தொடர்ந்து, இவர்களின் திருமணத்துக்கான, ப்ரீ வெட்டிங் வீடியோ ஷூட் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி எடுக்கப்பட்ட ப்ரீ வெட்டிங் வீடியோ தான் தற்போது வைரல் ஆகி வருகிறது.

ALSO READ: சிவாங்கி பாடி, நடித்துள்ள கவின், தேஜூ அஸ்வினியின் AskuMaaro ..Viral ஆகும் ப்ரோமோ!

தொடர்புடைய இணைப்புகள்

actress mehreen pirzada prewedding shoot video goes viral

People looking for online information on Actress, Mehreen Pirzada, Pattas Tamil, Prewedding, Shoot, Video, Viral will find this news story useful.