Reliable Software
www.garudabazaar.com

Video: 'முத்துவுக்கே' டஃப் கொடுத்த பவித்ரா.. அப்படி என்ன சொன்னாங்க? குக் வித் கோமாளி வைரல் ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 2 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இதன் சமீபத்திய புரோமோ வெளியாகியுள்ளது.

cook with comali2 pavithra counter Bala muthu ashwin

அஷ்வின், பவித்ரா, ரித்திகா, கனி, மதுரை முத்து, ஷகிலா, பாபா பாஸ்கர் பங்கேற்கும் இந்த ஷோவில் புகழ், சிவாங்கி, பாலா, சரத், தங்கதுரை, சுனிதா கோமாளிகளாக வருகின்றனர். ஒரு சிறிய விபத்து காரணமாக மணிமேகலை இந்த வாரம் பங்கேற்கவில்லை என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள அந்த புரோமோவில் குக் வித் கோமாளியில் இந்த வாரம் கோமாளிகளை குக்ஸ் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தனர். அதில் மதுரை முத்து அலாவுதீன் அற்புத விளக்கை கையில் எடுத்தார். அந்த அலாவுதீன் வேடத்தை போட்டிருந்தது நம் பாலா தான்.

இதன் பிறகு பேசிய பாலா, அஷ்வினுடன் இணைந்தால் 50 ஆயிரம் ரசிகர்கள் இணையத்தில் கிடைக்கிறார்கள், ஆனால் அந்த வாரம் எதாவது அசம்பாவிதம் நடந்தால், 70 ஆயிரம் பேர் வெளியே சென்றுவிடுகிறார்கள் என்று கூறுகிறார். இதன் பின்னர் அசுரனின் எள்ளு வய பாடலை போடச்சொல்லி கும்பிட்டபடி உருண்டார் பாலா.

இதை நேத்திக்கடன் என்று மதுரை முத்து சொல்ல, அவருக்கே டஃப் கொடுத்த் நம் பவித்ரா, ‘நேத்தி கடனை இன்னைக்கு ஏன் தீத்து வைக்குறார்?’ என்று கவுண்ட்டரை தெறிக்கவிட்டதும் செட் அதிர்ந்தது. அனைவரும் கோரஸாக பவித்ரா என கத்துகின்றனர். நிச்சயம் இந்த வாரம் செம்ம Fun இருக்கு என்பது தெரிகிறது.

ALSO READ: 'என்ன? இந்த படங்களை எல்லாம் நான் ரிஜக்ட் பண்ணினேனா?'.. 'உண்மைய பரப்பவே மாட்டிங்களா?!'.. இளம் நடிகர் ஆவேசம்!

தொடர்புடைய இணைப்புகள்

cook with comali2 pavithra counter Bala muthu ashwin

People looking for online information on Ashwin, Asuran, Pavithra Lakshmi, Pugazh will find this news story useful.