அடங்கற மாதிரி தெரியலை, கூட மகளையும் சேர்த்து அடிக்கும் லூட்டி-TikTok-அ அடிச்சு விளாசும் cricketer
முகப்பு > சினிமா செய்திகள்ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் அதிரடி பேட்டிங்குக்கு புகழ் பெற்றவர். கொரோனா பிரச்னையால் உலகமே முடங்கிக் கிடங்க, டேவிட் வார்னர் சமீபகாலமாக சோஷியல் மீடியாவில் அதகளப்படுத்தி வருகிறார்.

வார்னரின் ஸ்பெஷல் வீடியோக்கள் நெட்டிசன்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு வருகின்றன. தான் மட்டுமல்லாமல் மனைவி கேண்டிஸ் மற்றும் குழந்தைகளையும் வீடியோவில் ஆடச் செய்து அசத்தினார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புட்ட பொம்மா மற்றும் இஞ்சி இடுப்பழகி வீடியோக்கள் வைரலாகின.
தற்போது இன்னொரு க்யூட்டான வீடியோவுடன் களம் இறங்கியிருக்கிறார் டேவிட் வார்னர். பாகுபலி வேடத்தில் 'அமரேந்திர பாகுபலியனே நேனு' என்று வசனம் பேசுவதும், எதிரே குட்டிப் படையுடன் அவர் மகள் கையை உயர்த்தி ஓடி வருவதும் ரசிக்கத்தக்கதாக உள்ளது.
இந்த TikTok post சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.