Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளி-2 கடைசி நாள்.. உருக்கமான பதிவுடன் சிவாங்கி பகிர்ந்த ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

Cook With Comali Last day Sivaangi emotional post

குக் வித் கோமாளி சீசன் 1 முடிந்து சீசன் 2 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் சிவாங்கி, புகழ், ஷகிலா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிலையில் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடைபெறும் ஷூட்டிங் தளத்தின் புகைப்படத்துடன் ‘கடைசியாக இந்த இடத்தில் சந்தோஷாமாக இருக்கும் தருணம்’ என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியைவிட சீசன்2 சந்தோஷமான மன நிலையையும் தாண்டி உணர்வு ரீதியாக அனைவரும் ஒரு குடும்பம் போல இணைந்து பட்டையை கிளப்பினர். ஆனால் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி அனைவரையும் மிகவும் கவர்ந்தது. தற்போது சீசன் 2 முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் சிவாங்கி சமூக வலைப்பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

அண்மையில் விஜய் டிவி ஷோ ஒன்றி பேசியிருந்த சிவாங்கி, தன்னை அனைவரும் பள்ளிப்பருவத்தில் தன் குரலை வைத்து கலாய்த்ததாகவும் இப்போது எல்லோர் வீட்டு பிள்ளையாக பார்ப்பதாகவும் பெரியவர்கள் தலைமேல் கைவைத்து ஆசீர்வாதம் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் சிவாங்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் டான் படத்தில் நடித்து வருகிறார்.

ALSO READ: 'சுனிதா அக்கா என்னால நிறைய Face பண்ணிருக்காங்க'.. ரியாலிட்டி ஷோவில் ஃபீல் பண்ணிய சிவாங்கி!

குக் வித் கோமாளி-2 கடைசி நாள்.. உருக்கமான பதிவுடன் சிவாங்கி பகிர்ந்த ஃபோட்டோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Last day Sivaangi emotional post

People looking for online information on Sivaangi, Trending, VijayTelevision will find this news story useful.