Reliable Software
www.garudabazaar.com

கதறி அழுத ஷிவாங்கி... "ஸ்கூல்ல மத்த பசங்கலாம் என்னை"... இவங்க மனசுல இவ்ளோ கஷ்டம் இருக்கா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

sivaangi heart broken speech in award show மேடையில் கதறி அழுத ஷிவாங்கி

அதிலும் முக்கியமாக இந்த சீசனை ஷிவாங்கி அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கூட அவரை மில்லியன் கணக்கில் மக்கள் பாலோவ் செய்கின்றனர். இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற பெயரில் விஜய் தொலைக்காட்சி விருதுகள் சீக்கிரமே ஒளிபரப்பாக இருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் ஷிவாங்கி கண்கலங்கி வேதனையுடன் அழுவதைப் பார்க்க முடிகிறது. அவர் கூறும் பொழுது "பள்ளியில் என்னை இந்த குரலுக்காக பலரும் அவமானப் படுத்தி இருக்கிறார்கள். மற்ற ஆண் நண்பர்கள் கூட "யார் அந்த கீச்சு கீச்சுனு பேசும் பெண்ணா" என்று கேலி செய்தனர். ஆனால் இன்று என்னை அனைவரும் தங்கள் வீட்டு குழந்தையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரியவர்கள் கூட என்னை ஆசிர்வாதம் செய்வதை பார்க்க முடிகிறது" என்று வேதனையுடன் கண்கலங்கி கூறியுள்ளார்.

கதறி அழுத ஷிவாங்கி... "ஸ்கூல்ல மத்த பசங்கலாம் என்னை"... இவங்க மனசுல இவ்ளோ கஷ்டம் இருக்கா..! வீடியோ

Tags : Sivaangi

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

sivaangi heart broken speech in award show மேடையில் கதறி அழுத ஷிவாங்கி

People looking for online information on Sivaangi will find this news story useful.