ET Others
www.garudabazaar.com

எமோஷன்ஸ கண்ட்ரோல் பண்ணு… போகஸ் பண்ணு – சிவாங்கிக்கு சிவாங்கி சொல்லும் அட்வைஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

Cook with comali fame Sivangi advise to young sivangi

குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி சீசன் 2-ன் வெற்றிக்குப் பிறகு இப்போது மூன்றாவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பால்கி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை என குக் வித் கோமாளி சீசன் 2-ன் ஸ்டார்ஸ்களுக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் சில வாரங்களுக்கு முன்னர் புகழ் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்தார்.

Cook with comali fame Sivangi advise to young sivangi

சினிமாவில் குவியும் வாய்ப்புகள்:

கடந்த சீசனில் கலக்கிய அஷ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகியவர்களுக்கு சினிமாவில் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. புகழ் காமெடி நடிகராக அஜித்தோடு வலிமை படத்தில் நடிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. அஷ்வின்  கதாநாயகனாக என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் நடித்து அந்த படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. அதுபோலவே சிவாங்கி சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார். டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.  இது தவிர பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

ரசிகர்களோடு உரையாடல்

இந்நிலையில் சிவாங்கி சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின் தொடரும் ரசிகர்களோடு கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் பலர் சுவாரஸ்யமான கேள்விகளைக் கேட்டிருந்தனர். அதில் ஒரு ரசிகர் இப்போது இருக்கும் சிவாங்கி உங்கள் இளவயது சிவாங்கிக்கு என்ன அறிவுரைக் கூற விரும்புகிறீர்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சிவாங்கி ‘எமோஷன்ஸ கட்டுப்படுத்து. போகஸ் பண்ணு என அட்வைஸ் கூறியிருப்பேன்’ எனக் கூறியுள்ளார்.

அதுபோலவே மற்றொரு ரசிகர் நீங்கள் எப்போதாவது ஆணாக பிறந்திருக்கலாமே என ஆசைப்பட்டதுண்டா என்று கேட்டதற்கு சிவாங்கி ‘நிறைய முறை அதுபோல நினைத்திருக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். சிவாங்கியின் இந்த கேள்வி பதில் செஷன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

Cook with comali fame Sivangi advise to young sivangi

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali fame Sivangi advise to young sivangi

People looking for online information on Ashwin, Cook with comali, Pugazh, Sivangi will find this news story useful.