www.garudabazaar.com

"மாபெரும் உலக நடிகராக சிட்டிசன் படம் நடிகர் அஜீத்தை மாற்றியது!" - திண்டுக்கல் லியோனி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர். 

Citizen movie change Ajith as a world class actor - says Leoni

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.  நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்..  தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார். 

Citizen movie change Ajith as a world class actor - says Leoni

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர். 

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து  நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். 

நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

அனைவரையும் கலையால் வணங்குகிறேன் தமிழால் ஆராதிக்கிறேன். எனக்கு இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்று நேற்று முதலே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர் சரவனன் சுப்பையா திருவள்ளூரில் நடந்த பட்டிமன்றத்தில் எனக்கு எதிர் திசையில் பேசினார் அன்றைக்கு அவர் மீது நான் கடும் கோபத்திலிருந்தேன். முரணான தகவலாக பேசுகிறாரே  என்று எண்ணினேன். ஒருநாள் சந்திப்பில் அவர் உள்ளத்தில் நான் விழுந்திருக்கிறேன். நேற்று என்னை அழைத்த மாத்திரத்தில் இந்த விழாவில் கலந்துகொள்ள இசைவு கொடுத்தேன். அதேபோல் பி டி செல்வகுமார் கலப்பை அமைப்பு மூலம் பல குடும்பங்களுக்கு உதவியவர். மீண்டும் என்ற திரைப்படம் சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரவிருக்கிறது. அனகாவின் நடிப்பும், கதிரவன் நடிப்பும் கண்டு என் உடம்பு சில்லிட்டுப் போனது, என்னுடைய எலும்பையே உருக்கி விட்டது. மீண்டும் படத்தின் கதை அமைப்பு சமூக பிரக்ஞ்னை, சமகால சமூகத்தில் நிகழ்கின்ற சம்பவத்தை புள்ளியாக வைத்துக்கொண்டு அதில் கோலமாக விரித்து தந்திருக்கின்றன் சரவணன் சுப்பையா. ஒரு மிகப் பெரிய கலைஞனாக மீண்டும் படம் மூலம் அவதாரம் எடுத்திருக்கிறார். சமூக நீதியை நோக்கி சினிமா நகர்ந்து வருகிறது என்று இன்றைக்கு தமிழ் இந்துவில் செய்திக் கட்டுரை படித்தேன். நானும் இன்றைக்கு சினிமாவை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறேன். எல் கேஜி படத்தில் நான்  நடித்தபிறகு சினிமாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை தெரிந்துக்கொண்டேன். மீண்டும் படம் பெரிய வெற்றி படமாக அமையும். 

Citizen movie change Ajith as a world class actor - says Leoni

திண்டுக்கல் லியோனி பேசியதாவது:

ஒரு திரைப்படத்தின் வெளியீட்டு விழா, எல்லோருக்கும் பழக்கமான மேடை. இதில் ஆட் அவுட்டாக உட்கார்ந்திருப்பது நானும் நாஞ்சில் சம்பத்தும்தான். இது எனது 2வது மேடை.  முதல் மேடை போஸ் வெங்கட் இயக்கிய கன்னிமாடம் படம். சரவணன் சுப்பையா இயக்கத்தில் வரும் மீண்டும் எனது இரண்டாவது மேடை. சினிமாவில் நடிப்பது எவ்வளவு கஷ்டம் என்பது கங்கா கவுரி படத்தில் நான் நடித்தபோது எனக்கு தெரிந்தது. வேதனை படணும் என்று இயக்குனர் சொன்னார். அந்த ஒரு காட்சியில் நான் நடிப்பதற்கு மூன்றரை மணி நேரம் ஆனது. அன்றைக்கு தான் சினிமாவை விட்டேன். தண்டல் பாண்டியன் வேடத்தில்  அதில் நடித்தேன்.   அதற்கு பிறகு  தற்போது ஆலம்பனா படத்தில் இப்போது நடித்திருக்கிறேன். 

சரவணன் சுப்பையா இயக்கிய சிட்டிசன் படத்தில் அஜீத்துக்கு அப்படியொரு கிளைமாக்ஸ் காட்சி வைத்திருப்பார். மாபெரும் உலக நடிகராக அந்த படம் அஜீத்தை மாற்றும் அளவுக்கு சரவணன் சுப்பையா அமைத்திருப்பார். அவருக்கு இப்படம்  சிட்டிசன் போல் மீண்டும் ஒரு வெற்றி படமாக அமையும். இப்பட கதாநாயகன் கதிரவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். குடும்ப கதையம்சம், வெளிநாட்டு தரத்துடன் இணைந்து படத்தை கொடுத்திருக்கிறார் சரவணன் சுப்பையா. இசையும் மிக அற்புதமாக தந்திருக்கிறார் இசை அமைப்பாளர். .கலைப் படைப்பு நம் வாழ்க்கையில் ஒரு நிலையாவது மாற்ற வேண்டும். அதுதான் சிறந்த கலைப் படைப்பு. அதுபோன்ற படத்தை இயக்குனர் சரவணன் சுப்பையா மீண்டும் மீண்டும் தரவேண்டும் இப்படம் மக்கள் மீண்டும் பார்க்கும் வெற்றி படமாக அமையும். என்னை முதன்முதல் சினிமா மேடைக்கு அழைத்து வந்தவர் எஸ் ஏ.சந்திரசேகர். அவரால்தான் சென்னையை நான் முதன்முதலாக பார்த்தேன் . 

ஹீரோ கதிரவன் பேசியதாவது:

மீண்டும் படத்துக்காகவும் எனது கம்பெனிக்காகவும் நேரம் ஒதுக்கி இங்கு வந்த அனைவருக்கும் எனது நன்றி  திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத்,  ரங்கராஜ் பாண்டே, இயக்குனர் எஸ் ஏ சி சார் இவர்கள் எல்லாம் இங்கு வந்தது எனக்கு பெருமையாக இருக்கிரது. இவர்கள் எல்லோருக்கும் நான் ரசிகன் ஒரு ரசிகன் விழாவுக்கு நீங்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்கிறீர்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

இயக்குனர் சரவணன் சுப்பையா பேசியதாவது:

இந்த இடத்துக்கு என்னை அழைத்து வந்த தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு நன்றி அவர் இல்லாவிட்டால் இப்படியொரு வாழ்க்கை கிடைத்திருக்காது. மிகப்பெரிய அர்ப்பணிப்பை நடிப்பில் அவர் கொடுத்திருக்கிறார். எனது இரண்டு கண்களாக ஒளிப்பதிவாளர்  மற்றும் இசைப்பாளர். அவ்வளவு உழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.  பின்னணி இசை ஆங்கில பட பாணியில் இருந்தாலும் முழுக்க முழுக்க இந்திய இசை தான் அமைத்திருக்கிறார். இந்த படம் வெளியிட பல இடத்தில் பேசி பார்த்தோம் கைகொடுக்க வில்லை இக்கட்டான இந்த சூழலில்தான் பிடி செல்வகுமார் கைகொடுத்தார். அவர் இல்லாவிட்டால் இந்த படம் வருமா என்பது தெரியாது. 

இந்த விழாவுக்கு பாண்டே வந்திருக்கிறார். நான், நாஞ்சில் சம்பத்துடன் பட்டிமன்றத்தில் மோதியது உண்மை புறம்பான கருத்தை அப்போது சொல்லவில்லை. அவர் நம்பரை வாங்கி வைத்திருந்தேன். அவரை அழைத்தேன் அவரும் உடனே வருவதாக சொன்னார். திண்டுக்கல் லியோனி எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பவர். நீ சிறந்த சிந்தனையாளன். இன்னொரு சிட்டிசன் கொடு என்றார். சரி என்றேன் . மிகவும் எளிமையானவர். அதேபோல் எஸ் ஏ சி,, பேரரசு, ரவிமரியா வந்திருக்கிறார்கள். ஸ்டான்லி, கேபிள் சங்கர், சுபா தர்ஷினி, தேன்மொழி இப்படத்தில் நடித்திருக் கிறார்கள். இந்த படத்தில் அற்புதமான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி என்னை ஊக்குவித்தார். முக்கியமாக ஒத்துழைப்பு கொடுத்த டைமண்ட் பாபு அதேபோல் இடையில் ஒரு நிகச்சிக்கு எற்படு செய்துகொடுத்த விஜய முரளி  கெஸ்ட் அப்பியரன்ஸ் வந்துபோனார் அவருக்கும் எனது நன்றி . ஆனால் டைமண்ட் பாபுவோட உதவி அளப்பரியது. அவருடன் பிடி செல்வகுமார்  அசோசியேட் செய்து சிறப்பான விழாவாக இதை மாற்றிவிட்டார்கள். இந்த படத்தை பார்த்து என்னை கைதூக்கி விடுங்கள் வெற்றி பெற்றால் மிக நல்ல படங்களை தொடர்ந்து தருவேன் .

இவ்வாறு பேசினார்கள்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Citizen movie change Ajith as a world class actor - says Leoni

People looking for online information on Ajith, சரவணன் சுப்பையா, திண்டுக்கல் லியோனி, Citizen, Leoni will find this news story useful.