www.garudabazaar.com

நாயகி கேரக்டருக்கு 2 கணவர்களா? .. ‘மீண்டும்’ பட சர்ச்சை.. தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் நடித்த சிட்டிசன் படத்திற்கு பிறகு இயக்குநர் சரவண சப்பையா பரபரப்பாக இயக்கி வரும் படம்  “மீண்டும்”. இந்தப் படத்தில், புதுமுகம் கதிரவனுடன் ஜோடியாக அனகா நாயகியாக நடித்துள்ளனர்.

citizen director next meendum movie controversy

இந்த படத்தில் கதாநாயகிக்கு இரண்டு கணவர்கள் இருப்பது போன்று சர்ச்சைக்குரிய காட்சிகள் படமக்காப் பட்டிருப்பதை அறிந்த மாதர் சங்கங்கள் இயக்குநர் சரவண சுப்பையாவுக்கும், தயாரிப்பாளர் மணிகண்டனுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் கதிரவன் அனகா, சரவண சுப்பையா, பிரணவ்ராயன் (குழந்தை நட்சத்திரம்), அனுராதா, துரை சுதாகர், சபீதா ரெட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி சுப்ரமணிய சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன் கேபிள் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முன்னதாக இந்த படத்தில் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தபோது ஹீரோயின் சம்பந்தப்பட்ட முதலிரவு - படுக்கையறை பாடல் காட்சியை கவர்ச்சியாக நடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது அனகா நடித்து முடித்ததும் படுக்கையறை காட்சியை பாடலில் பயன்படுத்தக் கூடாது என்று இயக்குநர் சரவண சுப்பையா பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் படப்பிடிப்பில் பரபரப்பு நிலவியது. சூழலைப் புரிந்துகொண்டு அந்த் காட்சியை குறைத்துக் கொண்டார். இப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

citizen director next meendum movie controversy

People looking for online information on Meendum, Meendum press meet, Sharavanan Subbaiya will find this news story useful.