www.garudabazaar.com

மாஸ்டர் படத்திற்கு தணிக்கை குழு அளித்த சான்றிதழ் இதுதான்... படக்குழுவினர் மாஸ் அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தற்போது நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

censor certificate for vijay master film மாஸ்டர் தணிக்கை குழு அளித்த சான்றிதழ்

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் குறித்து பிரத்யேக தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. இத்திரைப்படம் வரும் 2021-ஆம் வருடம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. பொங்கல் திருநாளை ஒட்டி, நேரடியாக தியேட்டர்களில் வெளியாகும் என விவரம் அறிந்த கோலிவுட் வாசிகள் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷமாக, மாஸ்டர் படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டனர். மரண மாஸாக இருந்த டீசர் யூடியூபில் சாதனை படைத்தது.

இந்நிலையில் பலரும் ஆவலுடன் காத்திருக்கும் மாஸ்டர் பட ரிலீஸ் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்திற்கு தணிக்கை குழுவினர் U/A சான்றிதழ் அளித்துள்ளதாகவும். மாஸ்டர் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதினிமித்தம் தளபதி ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

censor certificate for vijay master film மாஸ்டர் தணிக்கை குழு அளித்த சான்றிதழ்

People looking for online information on Announcement, Master will find this news story useful.