www.garudabazaar.com

ஜெயம் ரவியின் ‘பூமி’ பொங்கலுக்கு ஓடிடி தளத்தில் ரிலீஸ்... வெளியான அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மண் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நிதி அகர்வால், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். மே 1-ம் தேதி வெளியாக இருந்த இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போனது. ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Important announcement on boomi film release

இந்நிலையில் படத்தின் வெளியீடு பற்றிய முக்கிய அறிவிப்பை தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதில் "திரு. ஜெயம் ரவி நடிப்பில் எங்களது முதல் வெற்றித் தயாரிப்பான 'அடங்கமறு' படத்திற்கும் தற்போது திரு. ஜெயம் ரவியின் 25வது படமாக திரு லக்ஷ்மன் இயக்கத்தில் நாங்கள் தயாரித்திருக்கும் பூமி திரைப்படத்தை துவங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து ஆதரவளித்து வந்துள்ளீர்கள். அதற்கு எங்களது மனமார்ந்த நன்றி. தியேட்டரின் வெளியீட்டிற்க்காக மட்டுமே மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படம் தவிர்க்க முடியாத கால சூழ்நிலைகளால் தியேட்டரில் வெளியிட முடியாத நிலையில் இப்படம் "Disney Hotstar on தளத்தில் வெளியாகிறது.

25வது படம் என்பது ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு மைல்கல். அதனை அனைத்து ரசிகர்களும் கொண்டாட வேண்டும் அவர்கள் ரசனையை குறுந்திரையில் சுருக்க வேண்டாம் என்பதே எங்களுடைய விருப்பமும் கூட, ஆனால் நாம் இன்று எதிர்கொள்ளும் நிகழ்வுகளை கணக்கிடும்போது தியேட்டர் வெளியீடு என்பது சாத்தியம் இல்லாத சூழ்நிலையை உறுதி செய்கிறது. தங்களது மேலான ஆதரவை OT வெளியீட்டிற்கும் தொடர வேண்டுகிறோம்" என்று கூறியுள்ளனர்.

Tags : BOOMI

Important announcement on boomi film release

People looking for online information on BOOMI will find this news story useful.