ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ படம் ஆரம்பம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 11, 2019 11:44 AM
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கும் ‘தலைவி’ திரைப்படத்திற்காக படபிடிப்பு நேற்று தொடங்கியது.

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பகுபலி’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
Tags : Kangana Ranaut, Vijay