Naane Varuven D Logo Top
www.garudabazaar.com

VIDEO: சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி BIGGBOSS சீசன்-6 க்கு போட்டியாளரா வராங்களா? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

BIGG BOSS சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல பாடகி ராஜலெட்சுமி  பங்கேற்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

BIGGBOSS Season 6 Tamil Contestant Super Singer Raja Lakshmi

Also Read | "ராஜராஜ சோழன் எந்த மதம்?".. பிரஸ் மீட்டில் கமல் சொன்ன பரபரப்பு பதில்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி எப்பொழுதும் தமிழில் ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடைபெறும். கடந்த இரண்டு சீசன் மட்டும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை நடைபெற்றது. 

சமீபத்தில் முடிந்த ஐந்தாவது சீசனும் கடந்த 4வது சீசனை போல் கடந்த அக்டோபர் மாதம் தான் தொடங்கியது. இந்நிலையில் 6வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான முன்னோட்ட வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

BIGGBOSS Season 6 Tamil Contestant Super Singer Raja Lakshmi

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள்  போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சுமார் 100 நாட்கள் வரை இருக்கும் நிலையில், அவர்களுக்கு ஏராளமான போட்டிகள்  வழங்கப்படும்.

இப்படி அனைத்து சவால்களையும் கடந்து, கடைசி வரை இருக்கும் நபர்களில் ஒருவர், வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முன்னதாக, அந்த வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

BIGGBOSS Season 6 Tamil Contestant Super Singer Raja Lakshmi

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜூ ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை வென்றனர்.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதியில் அந்த வாரம் வெளியேறப் போவது யார் என்கிற அறிவிப்பை நடிகர் கமலஹாசனே அறிவிப்பார்.

BIGGBOSS Season 6 Tamil Contestant Super Singer Raja Lakshmi

இந்நிலையில் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல பின்னணி பாடகி ராஜலெட்சுமி கலந்து கொள்ள இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பாடகி ராஜலெட்சுமி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர். சார்லி சாப்ளின், விஸ்வாசம், புஷ்பா ஆகிய படங்களில் இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் ஹிட் அடித்தவை.

பிக்பாஸ் சீசன் 6 தமிழ், வரும் அக்டோபர் 9 முதல் ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும்  என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் தான் பெரும்பாலும் கலந்து கொள்வார்கள். முதல் முறையாக பொது மக்களும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | கீர்த்தி சுரேஷின் விலையுயர்ந்த சொகுசு காருக்கு பூஜை.. விலை மட்டும் இம்புட்டா? என்ன ஸ்பெஷல்!

தொடர்புடைய இணைப்புகள்

BIGGBOSS Season 6 Tamil Contestant Super Singer Raja Lakshmi

People looking for online information on Bigg Boss Tamil, BIGGBOSS Season 6 Tamil, BIGGBOSS Season 6 Tamil Contestant, Kamal Haasan, Vijay Television will find this news story useful.