RRR Others USA

BBultimate: "ஐயோ நான் அந்த மாதிரி சொல்லல".. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட போட்டியாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியாளர் அபிராமி நடிகர் சிம்புவிடம் மன்னிப்புக் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Bigg boss ultimate abirami asked sorry to simbu

பிக்பாஸும் பிக்பாஸ் அல்டிமேட்டும்…

தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் ஏற்படுத்தியுள்ளன. அந்த சீசன்களின் வெற்றியை அடுத்து இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

கமல் விலகலும் சிம்பு வரவும்….

கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதாக அறிவித்தார். அவருக்கிப் பின் இப்போது சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்புவின் வருகையை அறிந்த போட்டியாளர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. போட்டியாளர்களிடம் இயல்பாக பழகி கமல் போலவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்கிறார் சிம்பு.

Bigg boss ultimate abirami asked sorry to simbu

சிம்புவை அவமதித்தாரா அபிராமி…

சமீப வாரங்களில் பிக்பாஸ் அல்டிமேட் பரபரப்பாக சென்றுகொண்டு இருக்கிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு என்ட்ரி கொடுத்து, போட்டியாளர்களுடன் மேற்கொண்ட உரையாடல்கள், அதிக அளவில் வைரலாகி இருந்தது. இதற்கு மிக முக்கிய காரணம், அந்த வாரத்தில் போட்டியாளர்கள் மத்தியில் நடந்திருந்த சண்டை, சச்சரவுகளை சிம்பு சீரியஸாக கண்டித்ததுதான். அதுபோலவே போட்டியாளர்களுக்கு சில அறிவுரைகளையும் சிம்பு வழங்கி இருந்தார். ஆனால் அதைப் பின்பற்றாமல் அபிராமி சிம்புவை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அபிராமி மேல் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்தன.

மன்னிப்புக் கேட்ட அபிராமி

இது சம்மந்தமாக இப்போது அபிராமி சிம்புவிடம் சிம்பு ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ‘நான் எதுவும் சிம்புவை அவமதிக்கும் வகையில் நான் நினைக்கவும் இல்லை. சொல்லவும் இல்லை. அப்படி உங்களுக்கு ஏதாவது தோன்றி இருந்தால் நான் சிம்புவிடமும் சிம்பு ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சிம்பு சொன்ன பல விசயங்கள் எனக்கு கண்ணைத் திறக்கும் விதமாக அமைந்தன. அதற்காக சிம்பு சாருக்கு நன்றி. அவர் வார்த்தைகளை நான் மதிக்கிறேன். அதனால் ஏதாவது தவறாக உங்களுக்கு தோன்றினால் என் இதயத்தில் இருந்து மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Bigg boss ultimate abirami asked sorry to simbu

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss ultimate abirami asked sorry to simbu

People looking for online information on Abirami, Biggboss, Simbu will find this news story useful.