பிக்பாஸ் முகேன் : 'கஷ்டம்தான்.. ஆனாலும் மீண்டு வருவேன்' - கண் கலங்க வைக்கும் மெசேஜ்.
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முகேன் தனது தந்தை மறைவுக்கு பின் இன்ஸ்டாகிராமில் உருக்கமான மெசேஜ் ஒன்றை தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் டைட்டிலையும் அவர் வென்றார். மேலும் பிக்பாஸ் போட்டியில் முகேன் பாடிய 'சத்தியமா நான் சொல்லுறேண்டி' பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி அன்று முகேனின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
இது குறித்து முகேன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 'என் வாழ்வில் நிச்சயம் இதுவே கடினமான தருணமாக இருக்கிறது. எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து எல்லாமுமாக இருந்த என் தந்தை இப்போது என்னுடன் இல்லை. இந்த வேளையில் எனக்கு ஆறுதல் கூறிய அனைவருக்கும் எனது நன்றிகள். I Love You அப்பா. எப்போதும் உங்கள் பெயரை காப்பாற்றும் மகனாக இருப்பேன். இது கஷ்டம் தான்.. ஆனாலும் இந்த வலியில் இருந்து மீண்டு வருவேன்' என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.