சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா... படப்பிடிப்பின் தற்போதைய நிலை என்ன..? இயக்குநர் தகவல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது.

vikram's cobra by ajay gnanamuthu shooting details is out

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. நடிகர் விக்ரமை வைத்து இவர் இயக்கும் படத்திற்கு கோப்ரா என பெயரிடப்பட்டுள்ளது. ஶ்ரீநிதி ஷெட்டி, மிர்னாலினி ரவி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஏ.ஆர். ரகுமான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஜய் ஞானமுத்து வெளியிட்டுள்ள பதிவில், 'கொல்கத்தாவில் படமாக்கப்பட்டு வந்த கோப்ரா படத்தின் ஷெட்யூல் நிறைவடைகிறது' என தெரிவித்துள்ளார். படத்தின் சில முக்கிய காட்சிகள் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  இதையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

Entertainment sub editor