www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா... அவரது கணவர் வெளியிட்ட பதிவு... செம வைரல் இப்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம்அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். சமீபத்தில் அவர் ஆரியிடம் கோபமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் போட்டி என்று வந்துவிட்டால் அனிதா புலியாக மாறிவிடுவார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். கடுமையான போட்டியாளராக இருந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென வெளியேறியது அவரது ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அனிதா கணவர் வெளியிட்ட பதிவு Biggboss Anitha Husband emotional post on her eviction

செய்தி வாசிப்பாளர் அனிதா பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிட்டதட்ட 100 நாட்கள் பிரிந்திருந்து இவர்கள் அவ்வப்போது தங்கள் அன்பை வெளிப்படுத்த தவறவில்லை. அவரது கணவர் பிரபா என்ன நடந்தாலும் தனது மனைவிக்கு ஆதரவாக பதிவுகள் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து அனிதா வெளியேறியதை பற்றி அவரது கணவர் பிரபாகரன் தற்போது ஒரு பதிவிட்டுள்ளார். அதில் பிக்பாஸில் அனிதாவுக்குகொடுத்த ஸ்மைலி பொம்மை ஒன்றை வெளியிட்டு, அதன் கீழே "என்னுடைய அருமையான தேவசேனா திரும்பி வந்துவிட்டாள்" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

அனிதா கணவர் வெளியிட்ட பதிவு Biggboss Anitha Husband emotional post on her eviction

People looking for online information on Anitha, Biggboss4tamil will find this news story useful.