www.garudabazaar.com

கணவரை நினைத்து மைனா எழுதிய விஷயம்.. ஷிவினின் வைரல் கமெண்ட்.. தனலட்சுமியின் ஜாலி பதில்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Biggboss 6 Tamil Shivin insist dhanalaksmi to write her name

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் ஒன்றின் காரணமாக ஏராளமான பிரச்சனைகள் உருவாகி இருந்தது. இதனால் கடந்த சில தினங்களாகவே ரணகளமாக தான் பிக்பாஸ் வீடும் இயங்கி வருகிறது. அப்படி ஒரு சூழலில் தற்போது பிக்பாஸ் வீடு வழக்கம் போல சற்று கலகலப்பாகவும் இருந்து வருகிறது.

போட்டியாளர்களுக்கு இடையே மாறி மாறி விவாதம் நடைபெற்று வந்த நிலையில் போட்டியில் Luxury Budget டாஸ்க்கும் நடைபெற்று வந்தது. இதிலும், மணிகண்டன், ஜனனி, ரச்சிதா, நிவா, தனலட்சுமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர். தற்போது பொம்மை டாஸ்க்கும் முடிவுக்கு வந்ததாக தெரியும் நிலையில், ஷிவின் மற்றும் அசீம் ஆகியோரை 'Worst Performer' மற்றும் சிறப்பாக பங்கெடுக்காத நபர் என்றும் கூறி சிறை செல்லும் படி பிக்பாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து முதல் ஆளாக அசீமும், பின்னர் ஷிவினும் சிறை உடையில் உள்ளே செல்கின்றனர். சிறையின் கதவுகளும் பூட்டப்பட்டு உள்ளன. இந்நிலையில், மைனா நந்தினி வீட்டுக்குள் இருந்த கண்ணாடியில் தனது கணவருடனான காதலை வெளிப்படுத்தும் விதமாக "ஐ லவ் யூ யோகேஷ்" என எழுதிவிட்டு செல்கிறார். அப்போது சிறையில் இருக்கும் ஷிவின், அந்த வாக்கியத்திற்கு கீழே தனது பெயரை எழுதும்படி தனலட்சுமியிடம் கூறுகிறார்.

இதனை கேட்டு அதிர்ந்துபோன தனலட்சுமி,"அந்த அக்கா அவங்க கணவரை நெனச்சு எழுதிருக்காங்க. நான் அந்த மாதிரி ஒரு குடும்பத்தை பிரிக்க மாட்டேன்பா" என்கிறார். அப்போது, மீண்டும் தனது பெயரை அதில் எழுதுமாறு வலியுறுத்தும் ஷிவின், இல்லையென்றால் தான் வெளியில் வந்து எழுதுவேன் எனவும் கூற, "முடிந்தால் வெளியே வந்து எழுது பார்ப்போம்" எனச் சொல்லிவிட்டு அருகே வருகிறார் தனலட்சுமி.

அப்போது,"அந்த அக்கா அவங்க கணவரை நினைச்சு எழுதிருக்காங்க" எனச் சொல்ல, தானும் அவருடைய கணவருக்காக எழுத சொல்வதாக ஷிவின் கூறுகிறார். இதனை கேட்டு செல்லமாக கோபித்துக்கொள்கிறார் தனலட்சுமி.

 

தொடர்புடைய இணைப்புகள்

Biggboss 6 Tamil Shivin insist dhanalaksmi to write her name

People looking for online information on Biggboss, Biggboss6Tamil, Dhanalakshmi, Myna Nandhini, Shivin will find this news story useful.