ET Others
www.garudabazaar.com

BB Ultimate : "ஆஹா, யாருங்க இது??.." சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்த நடிகை.. திக்குமுக்காடி போன ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ, தற்போது ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg boss ultimate ramya panidan surprise entry fans happy

இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களின் வெற்றி தான் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

டிவியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருந்ததோ, அந்த அளவுக்கு ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட்டிற்கும் பெரிய அளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

நடிகர் சிலம்பரசன்

கடந்த ஐந்து சீசன்களில் பங்கேற்று வந்த போட்டியார்களின் பட்டியலில் இருந்து, 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் களமிறங்கினர். இதற்கு மத்தியில் பிக்பாஸ் சீசன்களை போலவே, அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வந்த நடிகர் கமல்ஹாசன், பாதியில் விலகினார். இதனால், அவருக்கு பதிலாக நடிகர் சிலம்பரசன் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.

ரீ என்ட்ரி

இந்த நிகழ்ச்சியின் போட்டியாளராக இருந்த வனிதா, மன உளைச்சல் காரணமாக பாதியில் விலகினார். இதனைத் தொடர்ந்து, எலிமினேட் செய்யப்பட்ட சுரேஷ் சக்கரவர்த்தியும், வைல்டு கார்டு என்ட்ரியில் மீண்டும் உள்ளே வந்தார். அதன் பிறகு, விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு போட்டியாளர் சதீஷ் என்ட்ரி கொடுத்தார்.

பெண் போட்டியாளர் யார்?

இந்நிலையில், இதற்கு அடுத்தபடியாக முந்தைய பிக்பாஸ் சீசன்களில் போட்டியாளராக இருந்த பெண் போட்டியாளர் ஒருவர், என்ட்ரி கொடுப்பார் என தகவல்கள் வெளியாகி வந்தது. முதலில் ஓவியா வருவதாகவும், அதன் பிறகு லாஸ்லியா கண்டிப்பாக உள்ளே வருவார் என்றும் தகவல்கள் பரவி வந்தது.

சர்ப்ரைஸ் ஆன போட்டியாளர்கள்

இதனிடையே, நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நடிகை ரம்யா பாண்டியன் திடீர் என்ட்ரி கொடுத்து, பிக்பாஸ் அல்டிமேட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரின் சர்ப்ரைஸ் விசிட் மூலம் பிக்பாஸ் ஹவுஸ்மேட்கள் மகிழ்ச்சியில் திளைத்து போய், அவரைக் கட்டித் தழுவி வரவேற்றனர். இது தொடர்பான ப்ரோமோக்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

அடுத்தது யார்?

அதே போல, இனிவரும் நாட்களில் லாஸ்லியாவும் பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நிச்சயம் நுழைவார் என உறுதியான தகவல்களும் வெளியாகி வருகிறது. இதனால், லாஸ்லியா ரசிகர்கள் அவரது வரவையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss ultimate ramya panidan surprise entry fans happy

People looking for online information on Anitha Sampath, Balaji Murugadoss, BB Ultimate, Bigg Boss Season 4, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate New Promo, Ramya Pandian will find this news story useful.