Valimai BWE
www.garudabazaar.com

அதட்டிய தாமரை.. அடுத்த நொடியே நிரூப்க்கு Kiss கொடுத்த அபி.. Bigg Boss-ல அடுத்த முத்த சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 25, பிப்ரவரி 2022: டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முந்தைய சீசன் போட்டியாளர்கள் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது சிம்பு தொகுத்து வழங்கவிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.

Abhiami Kissed Niroop after thamarai order Bigg Boss Ultimate

தேவர்கள் மற்றும் அரக்கர்கள்

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டுக்குள் போட்டியாளர்களுக்கு தேவர்கள் மற்றும் அரக்கர்களாக நடந்து கொள்வதற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டாஸ்க்கின்படி போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து தேவர்கள் மற்றும் அரக்கர்களுக்கு உண்டான நடை, உடை, பாவனைகளுடன் வலம் வருகின்றனர்.

Abhiami Kissed Niroop after thamarai order Bigg Boss Ultimate

நிரூப்க்கு முத்தம் கொடு ...

இதில் தாமரை, நிரூப் மற்றும் அபிராமி இருவரையும் துன்புறுத்த வேண்டும், அப்படி துன்புறுத்தினால் தான் தாமரை அரக்கர் குலத்தில் இருப்பதை நியாயம் செய்ய முடியும், எனவே  நிரூப் மற்றும் அபிராமி இருவரும் அமர்ந்திருக்கும் ஒரு இடத்துக்கு தாமரை வருகிறார், வந்தவர் சொன்னது தான் ஆச்சர்யம். ஆம் துன்புறுத்துவதாக சொல்லி தாமரை நிரூப்புக்கு முத்தம் கொடுக்க சொல்லி அபிராமியை அதட்டினார். 

முதலில் ஒரு மாதிரி என்ன சொல்கிறார் தாமரை என்று புரியாமல் விழித்த அபிராமி, பின்னர் தாமரை கண்டிப்புடன் கூறவே, கிட்டத்தட்ட அபிராமி தாமரையின் சொல்லுக்குப் பணிந்துவிட்டார்.

Abhiami Kissed Niroop after thamarai order Bigg Boss Ultimate

குழந்தை கொடுத்தால் வாங்க மாட்டியா

ஆனால் நிரூப் இதனை மறுக்குமாறு பேச, அப்போது அவரையும் அதட்டிய தாமரை, “ஒரு குழந்தை அவள்.. குழந்தை கொடுத்தால் நீ முத்தம் பெற வேண்டும். அவ்வளவுதான்!” என்று சொல்லி விட்டு, “இப்போது நீ கொடு” என்று அபிராமியிடம் கூட, அபிராமி நிரூப்பை கட்டி பிடித்து முத்தம் கொடுக்கிறார்.

நிரூப் மற்றும் அபிராமி

நிரூப் மற்றும் அபிராமி இருவரும் முன்னாள் காதலர்கள் என்பதை இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் நேரத்திலேயே அதிகாரப்பூர்வமாக நிரூப் கூறியதை கேட்க முடிந்தது. மேலும்  நிரூப், ‘முன்பு பார்த்த அபிராமி போல் இப்போது இல்லை, அவளுக்கு ஏதோ அசௌகரியமான சூழல் இருக்கிறது’ என்று குறிப்பிட்டு அந்த நேரத்தில் அபிராமியை நாமினேட் செய்திருந்தார்.

Abhiami Kissed Niroop after thamarai order Bigg Boss Ultimate

நிரூப்க்கு அபிராமி கொடுத்த முத்தம்

இதனிடையே அபிராமி மற்றும் பாலாஜி இருவரின் நெருக்கமான பழக்கத்தை பற்றி, நிரூப்பிடம் வனிதா பேசியபோது, “பாலாஜி என்னுடைய நண்பன், அபிராமி என்னுடைய முன்னாள் காதலி என்பது அவனுக்கு தெரியும், பிறகெப்படி அபியுடன் பாலாஜி, அந்த எண்ணத்தில் பழகுவான்?” என்று பதில் கூறி இருந்தார். இந்த நிலையில்தான் தாமரை சொன்னதற்காக நிரூப்க்கு அபிராமி முத்தம் கொடுத்துள்ளார்.

Also Read: "நீ தேவதையா?.. சாமரம் வீசு தாசியா?".. பிக்பாஸ் வீட்டில் தாமரையிடம் அபிராமி கேட்ட பரபரப்பு கேள்வி..

தொடர்புடைய இணைப்புகள்

Abhiami Kissed Niroop after thamarai order Bigg Boss Ultimate

People looking for online information on Abhiami Kissed Niroop, BB Ultimate Tamil, Bigg Boss OTT, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Tamil, Thamarai Selvi will find this news story useful.