ET Others
www.garudabazaar.com

பாரதிக்காக கண்ணம்மா எடுத்த பெரும் 'ரிஸ்க்'.. கதறித் துடித்த 'பாரதி'.. என்ன ஆச்சு..??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், பாரதி கண்ணம்மாவுக்கு டாப் வரிசையில் இடமுண்டு.

accident for kannamma in barathi kannamma 9 to 12 march 2022

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களாக வரும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், கணவன் மனைவியாக இருந்த போதும், சில சூழ்நிலைகளால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, பாரதியை திருமணம் செய்யவும் துடியாக துடிக்கிறார் வெண்பா.

திரும்பி பார்க்க வைத்த ப்ரோமோ

மேலும், பாரதி மற்றும் கண்ணம்மா தம்பதியரின் குழந்தையான ஹேமா பற்றிய உண்மையும் பாரதிக்கு தெரியாது. அதனை பலமுறை எடுத்துச் சொல்ல கண்ணம்மா முயன்ற போதும், நம்புவதற்கு பாரதி தயாராகவில்லை. தொடர்ந்து, கண்ணம்மாவை பாரதி தவறாக நினைக்கும் ப்ரோமோக்கள் மற்றும் எபிசோடுகள் வெளியாகி வந்த நிலையில், புதிய ப்ரோமோ ஒன்று பாரதி கண்ணம்மா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கார் Repair

பாரதியின் கார், நடுரோட்டில் Repair ஆகி நிற்க, அதனை அவர் சரி பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவரை காரைத் திறந்து, பாரதியின் செல்போன் மற்றும் பர்ஸினை திருடுகிறார். இதனை பாரதி கவனிக்காமல், கார் வேலைகளில் பிசியாக இருக்க, அந்த வழியாக வரும் கண்ணம்மா கவனித்து விடுகிறார்.

கண்ணம்மா எடுத்த 'ரிஸ்க்'

உடனடியாக ஓடிச் சென்று, திருட்டைத் தடுக்கும் முயற்சியில் கண்ணம்மா ஈடுபட, சுதாரித்துக் கொண்ட பாரதியும் சேர்ந்து திருடனுடன் போராடுகிறார். அப்போது, கத்தியை எடுத்து, பாரதியை திருடன் குத்த வரும் நிலையில், குறுக்கே செல்கிறார் கண்ணம்மா. கணவரின் உயிரைக் காக்க, கத்திக் குத்தை வாங்கிக் கொள்ளும் கண்ணம்மாவை, மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறார் பாரதி.

பாரதியின் பதற்றம்

மேலும், அவர் உயிருக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்திலும் வேகமாக சிகிச்சையை மேற்கொள்ளச் சொல்கிறார் பாரதி. இதனைக் கண்டு கொண்டே இருக்கும் வெண்பாவின் முகமும் மொத்தமாக இருண்டு போகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இத்தனை நாட்கள் கண்ணம்மாவை வெறுத்தும், பிரிந்தும் இருக்கும் பாரதி, தனது உயிரைக் காக்க கத்திக்குத்து வாங்கியதால், அவர் மீது அனுதாபப்பட்டு உயிருக்கு ஒன்றும் ஆகி விடக்கூடாது என்றும் பயம் கொள்கிறார். இதனால், இந்த விபத்திற்கு பிறகு ஒன்று சேருவார்களா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

accident for kannamma in barathi kannamma 9 to 12 march 2022

People looking for online information on Barathi, Barathi Kannaamma, Barathi Kannamma Latest episode, Barathi Kannamma New Promo, Barathi Kannamma Promo, Kannamma will find this news story useful.