www.garudabazaar.com

பிரபல தயாரிப்பாளர் தயாரிக்கும் புதிய தமிழ் படத்தில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

BIGG BOSS TAMIL FAME SIGNS HIS 1ST MOVIE AS HERO

நடிகர் ஆரி மற்றும் பாலாஜி முருகதாஸ் இறுதி கட்டத்தை எட்டினர். இதில் பாலாஜியை வீழ்த்தி ஆரி பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றினார். ஆரி, பாலாஜி இருவருக்கும் நான்காவது சீசன் ஆரம்பித்த போதே இருவருக்கும் ரசிகர் பட்டாளம் உருவானது பிக்பாஸ் ரன்னராக இரண்டாம் இடத்தை பாலாஜி பிடித்தார்.

BIGG BOSS TAMIL FAME SIGNS HIS 1ST MOVIE AS HERO

பிக்பாஸில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், இதில் கிடைக்கும் ரசிகர்கள், மக்கள் ஆதரவு, பிரபலியம் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அதில் ஹரீஷ் கல்யாண், கவின், முகின், ரைசா வில்சன்,ஆரவ் ஆகியோர் முக்கியமானவர்கள். இந்த பட்டியலில் தற்போது பாலாஜியும் இடம் பிடித்துள்ளார். 

BIGG BOSS TAMIL FAME SIGNS HIS 1ST MOVIE AS HERO

இந்நிலையில் லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்திர் சந்திரசேகரன் தயாரிப்பில் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் பாலாஜி முருகதாஸ். இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தனது சமூக வலைதளங்களில் பாலாஜி வெளியிட்டுள்ளார். அதில் எதிர்பாராததை எதிர்பார்த்திருங்கள் என கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

BIGG BOSS TAMIL FAME SIGNS HIS 1ST MOVIE AS HERO

People looking for online information on Balaji Murugadoss, Bigboss, Libra Productions, Ravindran will find this news story useful.