www.garudabazaar.com

LATEST: பிக்பாஸ் கவின் படத்தின் அடுத்த சூப்பர் அப்டேட் வந்தாச்சு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமான நடிகர் கவின், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்த பின்னரும் கூட அவருக்கு சமூக ஊடகங்களில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

bigboss kavin next film update soon fans are excited

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகழ் பெறுவதற்கு முன்பு, கவின் 'சத்ரியன்' மற்றும் 'நட்புனா என்னனு தெரியுமா' போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கவின் ஆரம்பத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.

bigboss kavin next film update soon fans are excited

தற்போது நடிகர் கவின் 'லிஃப்ட்' படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருக்கிறார். கவினுக்கு ஜோடியாக, அமிர்தா நடித்துள்ளார். இப்படத்தை வினீத் வரபிரசாத் இயக்குகிறார். ஏகா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால் இந்தப்படம் தயாரிக்கப்படுகிறது.

 

இப்போது, ​​தயாரிப்பாளர் தரப்பு ஒரு சுவாரஸ்ய அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளனர். ‘லிப்ட்’ படத்தின் இரண்டாவது பாடலை சிங்கிளாக நாளை (ஜூலை 22) மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிடுவார் என்பதே, அது. தயாரிப்பாளர்களிடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது! ஏற்கனவே இந்த படத்தின் ’என்ன மயிலு’ பாடல் வெளிவந்து ஹிட்டடித்தது.

bigboss kavin next film update soon fans are excited

People looking for online information on Amirtha, Amritha Aiyer, Kavin, Lift will find this news story useful.