Reliable Software
www.garudabazaar.com

'BiggBoss' பிரபலம் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்.. ஹீரோயின் இவர் தான்.. சிம்பு வெளியிட்ட Title Look!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் மகத் நடிக்கும் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை திரைப்படத்தின் போஸ்டரில் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார்.

Kaadhal Conditions Apply Libra Productions Mahat

சிம்பு நடித்த வல்லவன் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மகத். பின்னர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான மங்காத்தா திரைப் படத்தில் மகத் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருந்தார். இந்த படத்தை அடுத்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Kaadhal Conditions Apply Libra Productions Mahat

இதைத் தொடர்ந்து விஜய் நடித்த ஜில்லா படத்திலும் கவனிக்கத்தக்க அளவுக்கு மகத் நடித்திருந்தார். பின்னர் பிரியாணி, வடகறி, சென்னை-28 இரண்டாம் பாகம், அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து மகத் புகழ் பெற்றார்.

Kaadhal Conditions Apply Libra Productions Mahat

இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார்.\

ஆர்.அரவிந்த் இயக்கும் இந்த படத்தில் மகத்துக்கு ஜோடியாக சனா நடிக்கிறார்.  தவிர இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து விஜய் டிவி டிடி (எ) திவ்யதர்ஷினி, விஜே அபிஷேக், விவேக் பிரசன்னா, மகேஸ்வரி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

ALSO READ: 'டைட்டில் வின்னர்' இவர் தான்! சிம்பு பங்குபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2!

Kaadhal Conditions Apply Libra Productions Mahat

People looking for online information on KaadhalConditionsApply, Libra Production, Mahat, Ravindar Chandrasekaran will find this news story useful.