www.garudabazaar.com

"அசீம் பண்றது பச்சோந்தி தனம்".. கமல் முன் காரணங்களை அடுக்கிய ADK.. வைரல் ஆகும் அசீம் ரியாக்ஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

BIGG Boss Season 6 Tamil ADK speech about Azeem

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்றிருந்தது. நிறைய கடினமான போட்டிகள் இந்த சுற்றில் அரங்கேறி இருந்த நிலையில், அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி இருந்தார்கள்.

மிதிவண்டி டாஸ்க், பிரெட் டாஸ்க், Debate டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாகவும் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிந்து கொள்ள கடைசி வரை காத்திருக்க வேண்டிய சூழலும் இருந்தது. இப்படியாக தற்போது Ticket To Finale டாஸ்க்கும் தற்போது முடிவுக்கு எட்டி உள்ளது.

அது மட்டுமில்லாமல், இந்த TTF டாஸ்க்குகளுக்கு இடையே ஏராளமான விவாதங்கள் மற்றும் வாக்குவாதங்கள் கூட அரங்கேறி இருந்தது. ஆனாலும் விளையாட்டு முடிந்த பின்னர், அனைவரும் மீண்டும் பழையது போல உற்சாகமாக இருக்கவும், கலகலப்பாக ஒருவரை ஒருவர் ஜாலியாக கலாய்த்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இதற்கிடையே, BB Critics விருதுகள் வழங்கப்படுகிறது. சில பெயரில் விருதுகள் அங்கே இருக்க, அதனை தாங்கள் விரும்பும் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற சூழலும் உள்ளதாக தெரிகிறது. இதில் ஒரு சில போட்டியாளர்கள் மற்றவர்களுக்கு கொடுக்கும் விருதுகள் காரணமாக சில அதிருப்திகள் உண்டாகி வாக்குவாதங்களை உருவாக்கி இருந்தது.

இதற்கு மத்தியில் விக்ரமன் குறித்தும் நிறைய பேர் கருத்து தெரிவித்து வருகின்றனர். Ticket To Finale டாஸ்க் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை, விக்ரமன் தொடர்ந்து நியாயம் பேசுவது உள்ளிட்ட விஷயங்களில் தான் அதிகம் முனைப்புடன் இருப்பார் என்றும் டாஸ்க்கில் பெரிய அளவில் ஈடுபாடு இல்லாதவர் என்றும் கூட கருத்துக்கள் நிலவி வந்தது. இதனை சில ஹவுஸ்மேட்ஸ் கூட குறிப்பிட்டிருந்தனர். அப்படி ஒரு சூழலில், Ticket To Finale டாஸ்க்கில் விக்ரமன் விளையாட்டுத் திறனை பல போட்டியாளர்கள் பாராட்டியும் வருகின்றனர்.

BIGG Boss Season 6 Tamil ADK speech about Azeem

கேமில் சிறப்பாக ஆர்வம் காட்டுகிறார் என்றும், மிகவும் முனைப்புடன் அதிக பலத்துடன் செயல்படுகிறார் என்றும் நிறைய பேர் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், சற்று சீரியஸாகவே எப்போதும் இருக்கும் விக்ரமன், தற்போது Fun மோடில் செயல்பட்டது சக போட்டியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

வார இறுதி நாளில் கமல்ஹாசன் & போட்டியாளர்களிடையே கலந்துரையாடல் நடந்தது. இதில் ஒரு போட்டியாளர் மற்ற போட்டியாளரை மனதில் நினைத்து அவரது குணம் பற்றி இருக்கும் சில விஷயங்களில் ஏதேனும் மூன்றை தேர்வு செய்து அங்கிருக்கும் பலகையில் வைக்க வேண்டும்.

BIGG Boss Season 6 Tamil ADK speech about Azeem

அந்த நபர் தனியாக ரகசியமாக அந்த நபர் போட்டியாளரின் பெயரை வைத்திருக்க மற்ற 7 போட்டியாளர்களும் அந்த குணங்களின் அடிப்படையில் அது யாராக இருக்கலாம் என கணிக்கவும் வேண்டும். அனைவரும் ஒரு போட்டியாளரை நினைத்து அவர்கள் பெயரை சொல்லி அதற்கான காரணத்தையும் விளக்கிய பின்னர் அந்த மூன்று குணாதிசயத்தையும் தேர்வு செய்த நபர் அந்த நபர் யார் என்பதை வெளிப்படுத்துவார்.

இதில் சுயநலம், நயவஞ்சகர், பச்சோந்தி என்ன ஒரு போட்டியாளரை மனதில் நினைத்து விக்ரமன் வைக்க, அனைத்து போட்டியாளர்களும் அது யார் என்பதை கணித்து தங்களின் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

இதில் அசிம் என கணித்து பேசும் ADK, "நான் சொல்ற பேச்ச மட்டும் தான் இந்த வீட்ல இருக்குற எல்லாரும் கேட்கணும்ன்னு அசிம் நினைப்பாரு. அவர் பேச்சுக்கு எல்லாரும் ஆமாம் சாமி போடணும்னு நினைப்பாரு. அப்படி அவங்க கேட்கலைன்னா, அவங்க மேல ஒரு பழிய போட்டு ஓரமா உட்கார வச்சிருவாரு. இதை சுயநலம்னு சொல்றேன்.

அதே மாதிரி நயவஞ்சகர் ஏன்னா, கூட்டிட்டு போய் ஓரமா உட்கார வைத்து நாசுக்கா பேசுவார் சார். அழகா பேசுவாரு.  நல்லா பேசி நம்ம மண்டைய கழுவி அப்புறமா அதே ஒரு பெரிய பிரச்சினையாக்கி மாத்தி நம்ம மேல அதே பழியை போட்டுருவாரு. நம்ம கேட்டா இந்த வீட்ல இருக்குற எல்லா நியாயத்திற்கும் நான் தான் பேசுறேன் அவரை முன்னிலப்படுத்திப்பாரு. இந்த வீட்ல எந்த நியாயத்துக்கும் அவர் பேசுவது கிடையாது அடுத்தவங்களுக்கு பிரச்சனை உண்டு பண்றது மட்டும் தான் அவருடைய வேலை.

BIGG Boss Season 6 Tamil ADK speech about Azeem

பச்சோந்தி ஏன் சொல்றேன் அப்படின்னா சார், கடந்த சமீபத்துல அமுதுக்கும் அசிமுக்கும் ஒரு பெரிய பிரச்சனை போச்சு. அடிதடி வரைக்கும் போச்சு. அந்த சண்டை இன்னும் ரெண்டு மூணு நாளுக்கு இந்த பிரச்சனை போகும் அப்படின்னு நினைச்சுட்டு இருந்தேன்.

அடுத்த நாள் பாத்தா வாங்க மாம்ஸ் போங்க மாம்ஸ் அப்படின்னு தொடங்கிட்டாரு. இதை மிகப்பெரிய ஒரு பச்சோந்தித்தனமா நான் பார்க்கிறேன் . அவர் மன்னிப்பு கேட்கிற ஒரே காரணத்துக்காக இந்த வீட்டில் நிறைய பேர் அவரை மதிச்சு பேசுறாங்க. நானும் நண்பரா பழகுறேன். ஆனா அவரு திருப்பி திருப்பி அதையே செய்யும்போது வெறுப்பா இருக்கு சார்" என ADK தெரிவித்து முடித்ததும் Thats all my lord என விக்ரமன் பேசுகிறார். இறுதியில் "நீங்கள் யார் பெயரை எழுதியிருக்கிறீர்கள்?' என விக்ரமனிடம் கமல்ஹாசன் கேட்கும்போது அசிம் பெயரை தெரிவிக்கிறார் விக்ரமன்.

ADK இவ்வாறு கூறும் போது அசீமின் முகபாவனைகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

BIGG Boss Season 6 Tamil ADK speech about Azeem

People looking for online information on ADK, Azeem, BIGGBOSS Season 6 Tamil will find this news story useful.