www.garudabazaar.com

'ஜெயிலர்' படத்தில் இணைந்த மோகன்லால்.. மிரட்டலான லுக்கில் வெளியான தெறி போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயிலர் படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணைந்துள்ளார்.

Mohanlal has been roped in to play a Role in Rajnikanth Jailer

இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த ஜெயிலர் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார். இந்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம்  தயாரிக்கிறது.

இப்படத்தின் டைட்டில் லுக் & ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி உள்ளது.  இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் துவங்கியது.

இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் சிவ ராஜ்குமார், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். பிரபல சண்டைப் பயிற்சி இயக்குனர் ஸ்டன் சிவா  ஜெயிலர் படத்தில் சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மேலும் பல்லவி சிங் ஜெயிலர் படத்தில் ஸ்டைலிஸ்ட் & ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Mohanlal has been roped in to play a Role in Rajnikanth Jailer

இந்நிலையில் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து மோகன் லால் லுக் போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Mohanlal has been roped in to play a Role in Rajnikanth Jailer

People looking for online information on Jailer, Mohan Lal, Rajinikanth will find this news story useful.