சமீபத்தில் பிறந்த குழந்தையின் ஃபோட்டோவை பகிர்ந்த பிக்பாஸ் நடிகை - 'ஊரடங்குக்கு நன்றி'
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நடிகையான சுஜா வரூணி பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக கவனம் பெற்றார். அவர் நடிகரும், நடிகர் திலகம் சிவாஜியின் பேரனுமான சிவகுமாரை திருமணம் செய்தார்.

நடிகர் சிவகுமார் மற்றும் நடிகை சுஜா வரூணி தம்பதியினருக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்த பிறந்தது. இருவரும் அந்த குழந்தைக்கு எஸ்.கே.அத்வைத் என்று பெயர் வைத்துள்ளதாக அறிவித்தனர். இதனையடுத்து சுஜா தனது குழந்தை குறித்து பதிவிடும் பதிவுகள் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து தற்போது அவரது பதிவில், எனது மகன் பிறந்து 8 மாதமாகிறது. இது எங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத பயணம். எங்கள் வாழ்க்கையில் மகன் வந்த அந்த தருணம் முதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கிறது. சிவாவிற்கும் எனக்கும் வாழ்க்கை சிறப்பானதாக மாறியிருக்கிறது.
குழந்தைக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். இன்று காலை முட்டை சாப்பிட்டான். இப்படி தான் எங்கள் உணவு இருக்கிறது. நன்றி லாக்டவுன் இந்த பிரச்சனைகள் சீக்கிரம் சரியாகும் என்று நினைக்கிறேன். அதுவரை வீட்டிலேயே இருங்கள்'' என்று தெரிவித்தார்.