பாலிவுட் லெஜன்ட் உடன் கை கோர்க்கும் அமலா பால் ! புதிய அறிவிப்பு இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் இயக்குநர் மகேஷ்பட் இயக்கும் வெப் தொடரில் நடிகை அமலாபால் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

amala paul to act in mahesh bhatt directorial web series

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமலா பால். சிந்து சமவேளி படத்தின் மூலம் அறிமுகமான இவர் மைனா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இதையடுத்து விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். அண்மையில் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் ஆடை படத்தில் நடித்தார். ஆடைகளின்றி ஒரு பில்டிங்க்குள் மாட்டிக்கொண்ட பெண்ணாக நடித்த அமலாபாலுக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன.

இந்நிலையில் அமலாபால் அடுத்து நடிக்கவிருக்கும் பாலிவுட் வெப் தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாலிவுட்டின் மூத்த இயக்குநர் மகேஷ் பட் இத்தொடரை இயக்கவுள்ளார்.  அமலா பாலுடன் இணைத்து அம்ரிதா பூரி, தாஹிர் ராஜ் பசின் ஆகியோர் நடிக்கின்றனர். 70-களில் பாலிவுட்டில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து இத்தொடர் உருவாகவுள்ளது.

Entertainment sub editor