Reliable Software
www.garudabazaar.com

சித்தி 2 சீரியல் தரப்பில் பிரமாண்ட அறிவிப்பு... புதிதாக நுழைய போகும் பிரபலம்... என்னனு பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவியில் 1999-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் 'சித்தி'. நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் சிவகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேற லெவல் ஹிட்டடித்தது. இன்று வரைக்கும் பல குடும்பப் பெண்களின் பேவரைட் சீரியலாக  மனதில் நிற்கிறது சித்தி.இந்நிலையில் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே சித்தி சீரியலின் இரண்டாம் பாகத்தை சன் டிவி துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே ராதிகா சரத்குமார் இதிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஷூட்டிங் ஆரம்பித்த சில மாதத்திலேயே கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட சீரியல் அப்படியே நிறுத்தப்பட்டது. அதேபோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பொன்வண்ணன் உள்ளிட்ட சில கதாபாத்திரங்கள் மாற்றப்பட்டனர்.

big announcement from chithi 2 serial சித்தி 2 சீரியல் பிரமாண்ட அறிவிப்பு

தற்போது கவின் - வெண்பா திருமணம் பற்றிய திருப்பங்கள் நிகழ்ந்து வரும் முக்கியமான கட்டத்தில் சீரியல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சித்தி 2 சீரியலில் இருந்து நடிகை ராதிகா விலக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது அனைவருக்கும் ஷாக்கிங்காக இருந்தது. அவர் கூறும்போது "ஒருவித மகிழ்ச்சி மற்றும் சோகம் கலந்த உணர்வுடன் சித்தி-2 மற்றும் அனைத்து மெகா சீரியல்களில் இருந்தும் தற்சமயம் நான் விலகிக் கொள்கிறேன். எனது கடின உழைப்பு மற்றும் பெஸ்ட்டை எப்பொழுதும் சன் டிவிக்கு கொடுத்துள்ளேன். அங்கு வேலை செய்யும் டெக்னீஷியன்கள் மற்றும் உடன் நடிக்கும் நடிகர்களுக்கு பிரியா விடை கொடுப்பது கவலையாக இருக்கிறது. ஆனாலும் நிகழ்ச்சி தொடர்ந்து நல்லபடியாக நடக்க வேண்டும். கவின், வெண்பா மற்றும் யாழினிக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சித்தி 2 சீரியலில் புதிதாக  மிகப் பெரிய மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாம்.  இதனை சித்தி 2 சீரியல் நடிகர்கள் தங்களின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த நிலையில் சன் டிவி இதனை தற்போது  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அந்த பதிவில் "சித்தி-2 தொடரில் புதிதாக வரப்போகும் அந்த ஒருவர் யார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்தை இந்த பதிவிற்கு கீழே பகிர்ந்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SunTV (@suntv)

Tags : Chithi 2

big announcement from chithi 2 serial சித்தி 2 சீரியல் பிரமாண்ட அறிவிப்பு

People looking for online information on Chithi 2 will find this news story useful.