www.garudabazaar.com

VIDEO: இறைவன் கொடியவன்! வெளியானது ராக்கி படத்தின் உலக தரமான இரண்டாவது டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் இரண்டாவது டிரெய்லர் ரிலீஸ் ஆகி உள்ளது.

Rocky Movie Second Trailer Released Vasanthravi Bharathiraja

இந்த ராக்கி படத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வெளியீட்டுக்கு சினிமா ரசிகர்கள் காத்திருந்தனர். இந்த படம் வரும் டிசம்பர்-23 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அனைத்து உரிமையையும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் ராக்கி படத்தின் மிரட்டலான 2வது டிரெய்லர் வெளியாகி உள்ளது. 

Rocky Movie Second Trailer Released Vasanthravi Bharathiraja

உள்ளத்தில் அரக்கன் உயரத்தில் இறைவன் அரக்கனிடம் தப்பிக்க இறைவனிடம் அடைக்கலம் கேட்டேன் சாவடா என்று சபித்து விட்டான் துயரத்தில் நிற்க அரக்கன் வந்தான் வாழ் தந்தான் வாழடா என்று வாழ்த்தி சென்றான் இறைவன் கொடியவன் அரக்கன் மேலோன் எல்லை இல்லா வல்லமை கொண்ட இறைவா இந்த ஆதி புதிருக்கு விட தாரும் உன்னால் சுமக்க முடியாத பாரத்தை உன்னால் படைக்க இயலுமா என்ற பிண்ணனி குரலுடன் பாரதிராஜாவின் நடிப்பும், படத்தொகுப்புடன் ஒத்திசைந்த சிறப்பு சப்தங்களும், ஒளிப்பதிவு கோணங்களும், வண்ணங்களும் படத்தின் டிரெய்லரை உலகத்தரத்தில் உயர்த்துகின்றன.

Rocky Movie Second Trailer Released Vasanthravi Bharathiraja

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் 2011-ஆம் ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கல்ட் அந்தஸ்து பெற்றுள்ள நியோ நொய்ர் வகைமையில் உருவான 'ஆரண்ய காண்டம்’ படத்தில் உதவி இயக்குனாரக இருந்தவர். இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கிய  ‘இறுதிச்சுற்று’ படத்தில் வசன எழுத்தாளராகவும் பணியாற்றியவர். அருண் மாதேஸ்வரன் தற்போது, செல்வராகவனையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து ‘சாணிக் காயிதம்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படமும் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது.

 

VIDEO: இறைவன் கொடியவன்! வெளியானது ராக்கி படத்தின் உலக தரமான இரண்டாவது டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rocky Movie Second Trailer Released Vasanthravi Bharathiraja

People looking for online information on தர்புகா சிவா, ராக்கி, வன்ம பாதையில், Bharathi Raja, Darbuga Siva, Rocky, Vasanth Ravi, Vignesh Sivan will find this news story useful.