www.garudabazaar.com

விஜய் - சூர்யா.. 15 நிமிட பரபரப்பு சந்திப்பு.. என்ன பேசினார்கள்? செம Trending!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

பழங்குடி இருளர் இன மக்களுக்கு காவல்துறையினரால் நடக்கும் அநீதிக்கு எதிராக வழக்கறிஞர் சந்துருவாக வரும் சூர்யா நடத்தும் சட்ட வழியில் போராட்டமே ஜெய்பீம். அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ள இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

இந்நிலையில் நடிகர் சூர்யா, நடிகர் விஜயை சந்தித்து 15 நிமிடம் உரையாடியிருப்பதாக தகவல்கள் கிடுகிடுவென பரவி வருகின்றன. சன் நெட்வொர்க் நிறுவனத்தில் நடந்த இந்த சந்திப்பு பலருக்கும் உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஃப்ரண்ட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். பால்ய கால நண்பர்கள், க்ளாஸ்மேட்ஸ்களான இவர்கள் பேசுவதற்கு நிறையவே உள்ளன.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

நடிகர் விஜய்யின் தளபதி65வது படமான பீஸ்ட் படத்தினை சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

இதேபோல், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படமான 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, முன்னதாக தென்காசியிலும், படத்தின் இரண்டு பாடல்கள்  சென்னை மற்றும் கோவாவிலும் படமாக்கப்பட்டு முடிந்துள்ளன. இந்த தகவலை இயக்குனர் பாண்டிராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

இந்த படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார்.  சூர்யாவுக்கு ஜோடியாக, இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

இந்த ஒரு சூழலில் ஒரே தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ஒரே நேரத்தில் உருவாகும் 2 பட நடிகர்களான விஜய் - சூர்யாவின் இந்த சந்திப்பில் விஜய், சூர்யா நடித்த ஜெய்பீம் படம் குறித்து பேசியிருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக பீஸ்ட் பட ஷூட்டிங்கிற்காக, கோகுலம் ஸ்டூடியோஸில் விஜய் இருந்தபோது அவரை, அதே ஷூட்டிங் ஹவுஸில் சர்தார் பட கெட்டப்பில் கார்த்தி சென்று பார்த்த விஷயம் வைரலானது.

விஜய் - சூர்யா.. 15 நிமிட பரபரப்பு சந்திப்பு.. என்ன பேசினார்கள்? செம TRENDING! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Surya met Vijay in his Vanity For 15 minutes trending

People looking for online information on Etharkkum Thunindhavan, Suriya, Thalapathy65, Vijay will find this news story useful.