www.garudabazaar.com

ப்ளு சட்டை மாறனுடன் மோதும் Romantic படம்! அதர்வா- அனுபமா நடிக்கும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன 'நின்னு கோரி' படம் தெலுங்கில் 18 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தபடம், 53 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. 

atharva anupama thalli pogathey release date announced

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குனர் கண்ணன் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் நடிக்கிறார். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சண்முக சுந்தரம், இசையமைப்பாளராக கோபி சுந்தர், எடிட்டராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணிபுரிகின்றனர். பாடல்கள் மற்றும் வசனத்தை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார்.

atharva anupama thalli pogathey release date announced

கடந்த வருடமே இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து டிரெய்லர் வெளியானது. ஆனால் இந்த படத்தின் வெளியீடு மட்டும் பல காரணங்களால் தேதி குறிப்பிட்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படத்திற்கு தள்ளிப்போகாதே என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

atharva anupama thalli pogathey release date announced

வருகிற டிசம்பர்-3 ஆம் தேதி இந்தப்படம் உலகம் முழுவதும் ரிலீசாகிறது. இதே நாளில் ப்ளூசட்டை மாறன் இயக்கிய ஆண்டி இந்தியன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

atharva anupama thalli pogathey release date announced

People looking for online information on Anupama Parameshwaran, Atharva will find this news story useful.