www.garudabazaar.com

‘மெயின் பிக்சரே இனிமேதான்..!’ .. பாரதி கண்ணம்மா 2-வில் வெண்பா தெறி எண்ட்ரி..! Bharathi Kannamma 2

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியலின் இறுதி அத்தியாயங்கள் அண்மையில் நடந்து முடிந்ததை அடுத்து, முதல் சீசன் முடிவு பெற்றது.

Bharathi Kannamma 2 Venba Entry Bharathi Kannamma 2 Promo

இந்நிலையில் இந்த சீரியலின் 2வது சீசனில் கண்ணம்மாவாக, கடைசியாக நடித்து வந்த வினுஷாவும், பாரதியாக இம்முறை ரோஜா சீரியல் ஹீரோவான சிபு சூர்யனும் நடிக்கின்றனர்.  முதல் சீசனில் இருந்த அதே நடிகை இதிலும் பாரதியின் அம்மாவாக வருகிறார். முதல் சீசனில் கண்ணம்மாவின் அம்மாவாக (இறந்து போன கேரக்டராக) வந்த நடிகை தீபா இதில் கண்ணம்மாவின் அம்மாவாக நலமுடன் வருகிறார்.

இதில் கதைப்படி ஊரில் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த பாரதி அப்பாவின் பிசினஸை கவனித்துக் கொள்ளாமல் ஊதாரியாக சுற்றி வருகிறார். குடி குடிப்பது, ஊர் சுற்றுவது என பொறுப்பின்றி பாரதி சுற்றிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவருக்கு ஒரு திருமணம் பண்ணி வைத்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று அவருடைய அம்மா சௌந்தர்யா நம்புகிறார். இதனிடையே சௌந்தர்யாவின் அண்ணியும் பாரதியின் அத்தையுமான ஷர்மிளா தன்மகள் வெண்பாவை பாரதிக்கு கட்டி வைப்பதில் தீர்மானமாக இருக்கிறார். ஆனால் பாரதிக்கு மேட்ரிமோனியில் பெண் பார்க்க முயற்சிக்கிறார் சௌந்தர்யா.

இப்படி இந்த கதை போக, ஜெயிலில் சித்ரா என்கிற பெயரில் வினுஷா ( முதல் சீசன் கண்ணம்மா) அறிமுகமானார். ஜெயிலிலிருந்து அன்று ரிலீஸ் ஆகும் அவர் வெளியே வரும் பொழுது ஜெயிலுக்குள் சித்ராவை சந்திக்கும் தனம் என்கிற கேரக்டர், தான் ஜெயிலுக்குள் கஞ்சா விற்றதை சித்ரா காட்டி கொடுத்து விட்டதால் அவரை பழிவாங்கத் துடிக்கிறார். சித்ரா வெளியேறிய பின் அவரை கொல்வதற்கு ஆட்களை அனுப்பி விடும் திட்டத்தை சித்ராவிடமே நேராக தனம் தெரிவித்து பயமுறுத்துகிறார். ஆனால் ஜெயிலில் இருந்து வெளியேறிய பின் தன் தாய் மாமன் வீட்டுக்கு சித்ரா செல்ல அங்கு அவரை சேர்த்துக் கொள்ளாமல் விரட்டி விடுகின்றனர்.

அதன் பின்னர் சித்ரா தன்னுடைய அத்தை மாமா தன்னை சேர்த்துக் கொள்ளாததால் எங்கே செல்வது என தெரியாமல் இருக்க, அப்போது ஜெயிலில் இருக்கும் தனம் என்கிற பெண்மணி அனுப்பிய ஆட்கள் சித்ராவை துரத்தி வர, சித்ரா ஒரு பேருந்தில் ஓடிச் சென்று ஏற, அங்கு ஒரு கை கை கொடுத்து உதவுகிறது. அந்த கை கொடுக்கும் கை வேறு யாரும் அல்ல. அவர்தான் இந்த சீரியலில் ரியல் கண்ணம்மா. ஆம்,  இந்த கேரக்டரில் பிரபல சீரியல் ஹீரோயின் ரேஷ்மா நடித்திருந்தார்.

அதன் பிறகு கண்ணம்மா சித்ராவிடம் தன் கதையைச் சொல்கிறார். அதன்படி சிறுவயதில் பாரதியின் நண்பனை கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடியதாக ஒரு குட்டி கதையை சொல்கிறார். இதனால் மீண்டும் தன்னை தன் வீட்டார் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டு வருகிறார். இதனுடையே பேருந்து ஓரிடத்தில் நிற்க சித்ராவை கொலை செய்ய வந்தவர்கள் இருவரில் யார் சித்ரா என்று தெரியாமல் உண்மையான கண்ணம்மாவை கொலை செய்துவிடுகின்றனர். இந்த குற்ற உணர்ச்சியினால் கண்ணம்மாவின் பெயரில் சித்ரா கண்ணம்மாவின் வீட்டுக்கு சென்றார். அங்குதான் கண்ணம்மாவுக்கும் பாரதிக்குமான முரண்கள் கூர்மை அடைந்திருக்கின்றன. இந்த நிலையில்தான் பாரதியுடன் சிறு வயதில் படித்த வெண்பா தற்போது எண்ட்ரி கொடுக்கிறார்.

ஆம், முதல் சீசனில் வெண்பாவாக நடித்த அதே வெண்பா தான் இதிலும் வெண்பா. ஆனால் கதையும் மாறுகிறது, கேரக்டரும் மாறுகிறது. பாரதி கண்ணம்மா சீரியலின் முதல் சீசனில் பாரதியை காதலித்துவந்த வெண்பா, தன்னுடைய சூழ்ச்சியால், பாரதியின் மனதில் சந்தேகத்தை விதைத்து கணவன் மனைவியான பாரதி & கண்ணம்மாவை பிரித்தார். கடைசியில் பாரதியை திருமணம் செய்யவும் முயற்சித்தார். இறுதியில் வெண்பா ரோஹித்தை திருமணம் செய்துகொண்டும், பாரதி & கண்ணம்மாவின் வாழ்க்கையில் விளையாட, ஒரு கட்டத்தில் வெண்பாவின் வேஷம் கலைய, பாரதி வெண்பாவை வெறுத்தார். அப்போது வெண்பாவின் அம்மாவே வெண்பாவை போலீஸில் பிடித்துக் கொடுத்தார்.

இந்நிலையில் தான் பாரதி கண்ணம்மாவின் 2வது சீசனில் வெண்பா அதிரடியாக வேற லுக்கில் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த கேரக்டரில் நடிகை ஃபரீனா ஆசாத் நடித்து வருகிறார் என்பதும் திங்கள் முதல் வெள்ளி வரை பாரதி கண்ணம்மா சீரியலின் 2வது சீசன் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bharathi Kannamma 2 Venba Entry Bharathi Kannamma 2 Promo

People looking for online information on Bharathi Kannamma 2, Bharathi Kannamma 2 Promo, Bharathi Kannamma 2 today episode will find this news story useful.