www.garudabazaar.com

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை.. ஐரோப்பா & UK உரிமத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி  நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது.

Viduthalai Movie UK Europe Rights Bagged by Ahimsa Entertainment

Images are subject to © copyright to their respective owners.

Also Read | பாலா இயக்கும் வணங்கான்.. படத்தில் இணைந்த அருண் விஜய்? ஷூட்டிங் எந்த ஊர்ல?

விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இந்த விடுதலை படத்தில் ஜெயமோகன் எழுத்தாளராக பணிபுரிகிறார். மேலும் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையில் தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Viduthalai Movie UK Europe Rights Bagged by Ahimsa Entertainment

Images are subject to © copyright to their respective owners.

தற்போது விடுதலை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விடுதலை முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது.

Viduthalai Movie UK Europe Rights Bagged by Ahimsa Entertainment

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தின் ஐரோப்பிய நாடுகள் & ஐக்கிய ராஜ்யத்தின் வினியோக உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே பீஸ்ட், வாரிசு படங்களை ஐக்கிய ராஜ்யம் முழுவதும் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'விடுதலை' படத்தின் ஷூட்டிங்கில் சுதா கொங்கரா.. வெற்றிமாறன் கொடுத்த வாக்குறுதி! வைரல் ட்வீட்

தொடர்புடைய இணைப்புகள்

Viduthalai Movie UK Europe Rights Bagged by Ahimsa Entertainment

People looking for online information on Ahimsa Entertainment, Vetrimaaran, Viduthalai, Viduthalai Movie UK Europe Rights, Vijay Sethupathi will find this news story useful.