www.garudabazaar.com

"ஆஹா ஒன்னு கூடிட்டாங்க பா"- மொத்த விஜய் டிவியும் இங்க இருக்கு.. என்னவா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் எந்தவொரு நிகழ்ச்சியாக இருந்தாலும் அனைவரும் கூடி பிரம்மாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.பிறந்தநாள் முதல் வளைகாப்பு வரை பிரமாண்டமாக கொண்டாடுவார்கள் என்பது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.

Bharathi kannama serial director son 1 st birthday celebration

அதே போல்  இப்பொழுது ஒரு சூப்பரான சந்தோஷ தருணத்தில் அனைவரும் இணைந்துள்ளனர். மொத்த விஜய் டிவி நடிகர்களும் ஒன்று கூடி பண்டிகை போல் கொண்டாடுகின்றனர்.விஜய் டிவியில் பல சீரியல்கள் ஓடினாலும், ரசிகர்கள் மத்தியில் பாரதி கண்ணம்மா நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது ஒன்று சேர்வார்கள் என்று கேட்காத ரசிகர்களே இல்லை. அந்த அளவிற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது.

Bharathi kannama serial director son 1 st birthday celebration

பாரதி கண்ணம்மா தொடரில் ஏற்கனவே கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி பலர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த பாரதி கண்ணம்மா தொடருக்காக அவர் முக்கியமான 2 பிளாக் பஸ்டர் படங்களை கைவிட்டதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் ஜெய்பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரமும், சார்பட்டா பரம்பரை ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் தவற விட்டார் என்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். இருந்தாலும் பட வாய்ப்புகளை விட்டு விட்டு பாரதி கண்ணம்மா தொடரில் தொடர்ந்து நடித்து வந்தார். மீண்டும் மீண்டும்  பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வர பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.

Bharathi kannama serial director son 1 st birthday celebration

இப்பொழுது புதிய கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா, அவரது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து வருகிறார் இதனால், பழைய கண்ணம்மாவுக்கு கிடைத்த அதே ஆதரவு இவருக்கும் கிடைத்து வருகின்றது. பல அதிரடி திருப்பங்களுடன் நகரும் பாரதி கண்ணம்மா  தொடரில், எப்பொழுது இருவரும் இணைவார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகின்றது. அதற்கு பதிலளிக்கும் வகையில், இருவரும் ஆறு மாத காலம் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு அளிக்க, இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.

Bharathi kannama serial director son 1 st birthday celebration

அதற்கு பிறகு பல சுவாரசியமான விஷயங்கள் நடக்கின்றது. அடுத்து என்ன நடக்கப்போகிறது இருவரும் ஒன்று சேர்ந்து விடுவார்களா? அல்லது இத்தொடரின் வில்லியான வெண்பா என்ன சிக்கல்களை கொண்டு வரப்போகிறார் என்று பல குழப்பங்களும் தொடர்ந்து இருக்கத்தான்  செய்கிறது. இந்த விறுவிறுப்பான தொடரை இயக்குபவர் Praveen Bennett..

Bharathi kannama serial director son 1 st birthday celebration

சீரியல் ஒரு பக்கம் இருக்க, இவரது சொந்த வாழ்க்கையில் நடந்த சந்தோசமான தருணத்தில் அனைவரும் ஒன்று கூறியுள்ளனர். இவரது மகன் சாய் ப்ரத்யுஷின்  முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த பிறந்தநாள் விழாவில் விஜய் டிவியை சேர்ந்த அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை நடத்திக்கொடுத்தனர். பாரதி கண்ணம்மா தொடரை சேர்ந்த அனைவரும் இதில் கலந்து கொண்டனர். தற்போது இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூகவலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. குறிப்பாக ஃபரினாவின்  நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமீபத்தில் தான் அவருக்கு குழந்தை பிறந்தது. கைக்குழந்தையுடன் ஷூட்டிங்கில் பங்கு பெற்ற பல புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவியது. ராஜா ராணி சீரியலில் நாயகியான ஆலியா மானசா தன் கணவர் குழந்தையுடன் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்.

"ஆஹா ஒன்னு கூடிட்டாங்க பா"- மொத்த விஜய் டிவியும் இங்க இருக்கு.. என்னவா இருக்கும்? வீடியோ

Bharathi kannama serial director son 1 st birthday celebration

People looking for online information on பாரதிகண்ணம்மா, Birthdaycelebration, Praveen Bennett, SaiPradhyush will find this news story useful.