பாம்பை கையில் எடுத்து விளையாடும் பிரபல தமிழ் நடிகர்...! தலைக்கு என்ன தில்லு பார்த்தீங்களா.
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் ஒருவர் சாரைப் பாம்பை கையில் எடுத்து விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

மிமிக்ரி கலைஞராக கலக்கி வருபவர் படவா கோபி. தனது ஸ்டென்ட் அப் காமெடியாலும், நகைச்சுவையான பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்த இவர், படங்களிலும் நடித்து வருகிறார். சென்னை-28, பயணம், தொடரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர் அண்மையில் ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் நடித்தார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பாம்பு ஒன்றை கையில் பிடித்தபடி இருக்கும் போட்டோவை பதிவிட்டு, விவசாயிகளின் நண்பன்.. சாரை என பதிவிட்டுள்ளார். படவா கோபியின் இந்த பதிவை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வருகின்றனர்.