www.garudabazaar.com

உங்களுக்கு வந்தா 'ரத்தம்'... பாலாஜிக்கு எதிராக 'ஆதாரம்' பகிரும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குழந்தை என சொன்னார் என்று அர்ச்சனாவுடன் சண்டை போட்ட பாலாஜி பின்னர் அவருக்கு மகனாக மாறியது தான் பெரிய டிவிஸ்ட். அர்ச்சனா சிம்பிளி வேஸ்ட் கமெண்ட் கொடுத்தாலும் கொடுத்தார் யார் கெடைச்சாலும் சண்டை போடுவேன் மோடிலேயே பாலாஜி திரிகிறார். ஆனால் குரூப்பிஸம் பற்றி பேசிய பாலாஜியே அர்ச்சனா குரூப்பில் ஐக்கியமானது தான் பெரிய காமெடி.

Balaji given nicknames for Aari, Som and Velmurugan

நேற்று முன்தினம் வேல்முருகன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார். ஆஜீத் காப்பாற்றப்பட்டார் என கமல் அறிவித்தவுடன் பாலாஜி செய்த செயல் ரசிகர்களை எரிச்சல் மூட்டியுள்ளது. அவர் வேல்முருகன் முன்னிலையிலேயே ஆஜீத்தை கட்டிப்பிடித்து சந்தோஷம் தெரிவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை வறுத்து எடுத்தனர்.

இந்த நிலையில் பாலாஜி சக போட்டியாளர்களுக்கு வைத்த பட்டப்பெயர்கள் குறித்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது. ஆரிக்கு அட்வைஸ் ஆரி, சனம்க்கு முந்திரிக்கொட்டை, வேல்முருகன்க்கு டிப்ளமேட்டிக், சோம்க்கு பப்பட் என பெயர் வைத்த பாலாஜி அவரை குழந்தை என அழைத்தால் ஏன் கோபப்படுகிறார்? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Balaji given nicknames for Aari, Som and Velmurugan

People looking for online information on Balaji Murugadoss will find this news story useful.