www.garudabazaar.com
iTechUS

"பெண்களை அப்படி பேசுனேனா?".. Live-ல தனலட்சுமிக்கு போன் செஞ்ச அசீம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 6-ன் வெற்றியாளர் அசீம் தனது அனுபவம் குறித்து நமது சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.

Azeem makes call in between the interview to Dhanalakshmi

                    Images are subject to © copyright to their respective owners.

Also Read | "விக்ரமனுக்கும் எனக்கும் இதுல தான் சண்டை".. பிக்பாஸ் வின்னர் அசீம் EXCLUSIVE..!

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 6-ல் அசீம் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில் எப்போதும் இறுதியில் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைவது வழக்கம். ஆனால் கடந்த சீசனில் முதன்முறையாக அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று பேரும் கிராண்ட் ஃபினாலே-விற்குள் நுழைந்தனர். இந்த மூவரில் வெற்றி பெறப் போவது யார் என ரசிகர்களிடையே சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமே நடைபெற்று வந்த வேளையில் அசீம் தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல்ஹாசன். இது அவரது ரசிகர்களை பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

Azeem makes call in between the interview to Dhanalakshmi

Image Credit : Vijay Television

இந்நிலையில் நமது சேனலுக்கு அசீம் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். அப்போது தனது பிக் பாஸ் அனுபவங்கள் மற்றும் பிக் பாஸ் வீட்டில் உள்ளே நடந்த சம்பவங்கள் குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது பெண்களை தரக்குறைவாக பேசிய நபர் எப்படி வெற்றியாளராகலாம் எனவும் பெண்களை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக போட்டியாளர் ஒரு பெரிய கூறி இருந்ததாகவும் தொகுப்பாளர் கூறினார்.

இதனை கேட்ட அசீம் அதற்கு பதிலும் அளித்தார். அப்போது "பொம்மை டாஸ்கின் போது தனலட்சுமியை தள்ளி விட்டது சகஜமான ஒன்றுதான். இப்போதே தனலட்சுமிக்கு நான் போன் செய்து அதை விளக்குகிறேன்" என கூறி தனலட்சுமிக்கு போன் செய்தார். அப்போது பொம்மை டாஸ்கில் நான் ஏதாவது உள்நோக்கத்துடன் தொட்டதாக நினைக்கிறீர்களா? என தனலட்சுமி-இடம் அசீம் கேட்டார். அதற்கு தனலட்சுமி அப்படியே ஏதும் இல்லை எனவும் அது ஒரு டாஸ்க் என்ற முறையிலேயே நடந்தது எனவும், என்றுமே நீங்கள் எனக்கு அண்ணன் போன்றவர் என்றும் தெரிவித்தார்.

Azeem makes call in between the interview to Dhanalakshmi

இதனை அடுத்து பேசிய அசீம் "பிக் பாஸ் வீட்டுக்குள் பல பெண்கள் இருந்தனர். ஆணும் பெண்ணும் சரிசமமாக விளையாடக்கூடிய போட்டி இது. அப்போது சிறிய அளவில் தள்ளிவிட்டால் கூட பெரிய பிரச்சினையாக மாறும் என எனக்குத் தெரியும். அதுதான் இந்த விஷயத்திலும் நடந்தது. தேவையின்றி அவதூறு பரப்புபவர்கள் பற்றி கவலைப்பட்டால் நம்முடைய நிம்மதியே போய்விடும்" என்றார்.

Also Read | "பூமர் விக்ரமன்-னு எல்லாம் பேசுறாங்க.. அது ரொம்ப தப்பு".. அசீம் Exclusive..!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem makes call in between the interview to Dhanalakshmi

People looking for online information on Azeem, Azeem Exclusive, BB6, Dhanalakshmi will find this news story useful.